Header Ads



ஷரீஆ சட்டததை விமர்சித்த சுமந்திரன், கடுமையாக எதிர்த்த முஸ்லிம் எம்.பி.க்கள்

'சரீஆ' சட்டம் தொடர்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் உரைக்கு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்று (05) எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால் சபையில் கடும் வாக்குவாதம் இடம் பெற்றதோடு சுமந்திரன் எம்.பிக்கு உரையாற்றவிடாமல் முஸ்லிம் எம்பிக்கள் வாதத்தில் ஈடுபட்டனர்.

பாதுகாப்பு, நீதி மற்றும் சட்டம் ஒழுங்கு அமைச்சுக்கள் மீதான குழுநிலை விவாதம் நேற்று இடம்பெற்றது. விவாதத்தை ஆரம்பித்துவைத்து உரையாற்றிய எம்.ஏ.சுமந்திரன் எம்பி சவூதி அரேபியாவில் இலங்கை பெண் ஒருவர் கல்லால் அடித்துக் கொலைசெய்யப்பட இருப்பது குறித்து உரையாற்றினார்.

இஸ்லாமிய சரீஆ சட்டத்தை தொடர்புபடுத்தி அவர் உரையாற்றியதையடுத்து அமைச்சர் ரிசாத் பதியுதீன், எம்.மரிக்கார், நவவி, இஷாக் ரஹ்மான் ஆகியோர் தமது ஆசனங்களில் இருந்து எழுந்து நின்று தமது ஆட்சேபனையை வெளியிட்டனர்.

கல்லடித்துக் கொல்லப்பட இருக்கும் பெண்ணை பாதுகாக்க பாராளுமன்றத்தில் உள்ள 22 முஸ்லிம் உறுப்பினர்களும் போராடத் தயாராக உள்ளனர். ஆனால் சரீஆ சட்டத்தை விமர்சிப்பதற்கு இடமளிக்க முடியாது. சரீஆ சட்டத்தின் பிரகாரம் தவறு செய்தவர்களுக்கு மன்னிப்பு வழங்க முடியும். ஆனால் எம்மை நோகடிக்கும் வகையில் பேசக் கூடாது என அமைச்சர் ரிசாத் பதியுதீன் தெரிவித்தார்.

இதன்போது ஒழுங்குப் பிரச்சினை எழுப்பிய எம்.மரிக்கார் எம்பி இஸ்லாத்திற் குட்பட்ட விடயங்களை விமர்சிக்கக் கூடாது. நான் மரண தண்டனைக்கு எதிரானவன். மத்திய கிழக்கிற்கு அடிமைத் தொழிலுக்கு செல்வதை நான் கண்டிக்கிறேன். கொல்லப்பட இருக்கும் பெண்ணைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பு.

கடந்த கால இனவாதம் காரணமாகவே மக்கள் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினர். ஒரு மதத்தை விமர்சிப்பதாலேயே எதிர்க்கிறேன் என்றார். சுமந்திரன் எம்பி உரையாற்றும்போது, சவூதி அரேபியாவில் வீட்டுப் பணிப்¦ பண்ணாகப் பணியாற்றச் சென்ற அப்பாவி இளம் பெண் ஒருவரை அந்நாட்டுச் சட்டத்தின் படி கல்லடித்துக் கொல்வதற்கு நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டுள்ளது.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் ரிசானா நபீக் அந்நாட்டு சட்டத்துக்கு அமைய மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டார். இந்த நிலையில் இன்னுமொரு இலங்கைப் பெண் கொல்லப்படவுள்ளார்.

இலங்கையின் மனித உரிமை தொடர்பில் சர்வதேச நாடுகள் கேள்வியெழுப்பும் நிலையில், சவூதியின் இவ்வாறான நடவடிக்கை தொடர்பில் ஏன் சர்வதேச நாடுகளோ நாமோ கேள்வியெழுப்பாமல் இருக்கிறோம். சரீஆ சட்டத்தின் கீழ் சவூதியில் தண்டனை வழங்கப்படுகிறது. இங்கு வழங்கப்படும் தண்டனைக்கு எதிராக நாம் கேள்வியெழுப்புகிறோம்.

உலகமயப்படுத்தப்பட்ட நாடுகள் பலவற்றில் மோசமான தண்டனைகள் வழங்கப்படுகின்றன. இருந்தபோதும், இவ்வாறான தண்டனைகள் தொடர்பில் விமர்சனங்களும் காணப்படுகிறது. இவ்வாறான நிலையில் மோசமான தண்டனைகளை வழங்கும் சவூதியுடன் இராஜதந்திர உறவுகளை நாம் இடைநிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

சுமந்திரன் எம்பியின் உரையின் தவறான விடயங்கள் இருந்தால் நீக்குவதாக சபாநாயகர் கரு ஜெயசூரிய தெரிவித்தார். இருந்தாலும் சுமந்திரின் எம்பியின் உரைக்கு முஸ்லிம் எம்பிக்கள் இடையூறு செய்தனர்.

5 comments:

  1. இலங்கைக்கு வரும் வெளிநாட்டு பிரஜைகள் இலங்கை சட்டத்தை மதிக்க வேண்டும். அச்சட்டத்திற்கு உட்பட்டு நடக்க வேண்டும்.

    அது போலவே பணிப்பெண்ணாகவோ அல்லது வேறு தேவைகள் நிமித்தம் சவூதி செல்லும் நபர்கள் சவூதி சட்டத்திற்கு உட்பட்டே நடக்க வேண்டும். சவூதி செல்பவர்கள் அதன் சட்டத்திற்கு உட்பட்டு நடப்பேன் என்று கூறியே சவூதி செல்கிறார்கள். சவூதி சட்டத்தின் படி குற்றவாழியாக இனங்காணப்பட்டால் மாத்திரம் ஏன் தண்டனையை ஏற்க மறுக்கிறார்கள்.....!

    தண்டனைகள் வழங்கப்படும் போது மட்டும் ஏன் இஸ்லாமிய ஷரீஆ சட்டத்தை குறைகூறுகிறார்கள்......!

    ReplyDelete
  2. But i can say Hon.Sumanthiran is not a wrong man. Because no one did explain with justification about our Saria law

    ReplyDelete
  3. முஸ்லீம்களை வெளியேற்றிய புலிகளின் அராஜகம்பற்றிய உண்மையை பேசும்போது இனித்த சுமந்திரனின் பேச்சு காட்டுமிராண்டிச்சட்டத்தை விமர்சிக்கும்போது மட்டும் கசக்கின்றதோ..?

    சவூதி வாலாக்களே! உங்களது நாட்டின் சட்டத்தை உங்களுடைய பிரஜைகளோடு வைத்துக்கொள்ளுங்கள். வெளிநாட்டிலிருந்து பஞ்சம் பிழைக்க வந்தவர்களுக்கு வேண்டாமே.. தவறு செய்தவர்களை நாடுகடத்துங்கள்.. அதை விட்டு அவர்களைக் கொலைசெய்யாதீர்கள்..!

    ReplyDelete
  4. Killing a woman by stoning her to death is a medieval barbaric act, still being practiced in some places in this so called civilized world. Death penalties must be applicable to a human being if only, the convicts are endangers to humanity. This woman had fallen to a situation to make affair with man unlawfully due to her natural biological desires and due to various other external factors as she was living as servant in a very far place from family. Women are very week in nature in certain circumstances. What she committed is not term to a crime in general for which she would be stoned to death rather requiring rehabilitation.
    Most of the women who go abroad as a house maid are believed to be sexually abused.
    Most of in medieval time inhuman laws are still being practiced in some places under the name of misinterpreted version of Islam. The laws are applied differently depending on the convict’s country of origin.
    The Muslim MP(s) must take steps to legalize to forbid sending women to strange places as a house maid rather protesting blindly everything when feel that the subject is touching religious matter, like what some of the MP(s) did as stated in the above article.

    ReplyDelete
  5. ஒவ்வொரு நாட்டிற்க்கும் தனது இறையாண்மைக்கு உட்ப்பட்ட பிரதேசங்களை பாதுகாப்பதற்கு வேண்டிய சட்டங்களையும் அதன் நடைமுறைதொடர்பான ஏற்பாடுகளையும் செய்வதற்கான முழு உரிமையும் இருக்கின்றது. அது சமயம் சார்பானதோ தனியே அரசியல் யாப்பினை அடிப்படையாக கொண்டதோ எதுவாகிலும், அந்நாட்டிற்கு தொடர்புபடாத நாமோ அல்லது எந்தவொரு நாடுமோ கேள்விகேட்ப்பது சரியன்று. ஏன், ஐக்கிய நாடுகள் கூட உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதில் பல மட்டுப்பாடுகள் இருக்கும்போது. கௌரவ சுமந்திரன் ஐயா அவர்கள் ஒரு நாட்டின் சட்டத்தை விமர்சித்தது, வாக்களித்து அவரை பாராளுமன்றம் அனுப்ப பெரும் பிரச்சார வேலைகளை செய்த எனக்கு உறுத்தலாக உள்ளது.

    அவர் ஒரு பிரபல்யமான சட்டத்தரணி என்பதற்கு அப்பால் உண்மையிலே மிகவும் சிறந்த பண்புள்ளவர். ஆயினும் இவ்வாறு முற்கற்பிதமான வகையிலே கருத்து தெரிவித்தமை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில் ஒரு நாடு சட்டம் ஒன்றை கொண்டுவரும்போது அதனை மீறுவது குற்றமே. ஏன், நான் ஒரு மனிதனை கடத்தி வைத்துவிட்டு, இரண்டு நாட்க்களின் பின் விடுதலை செய்துவிட்டால், அதற்க்கான தண்டனை எனக்கு வழங்கப்படுகையில் நான் ஏற்றுக்கொள்ளவேணுமே தவிர எனக்கு இவ்வாறு செய்தால் தண்டனை கிடைக்கும் என்று தெரியாது, சட்டம் தெரியாமல் தவறுதலாக செய்துவிட்டேன் மன்னிக்கும்படி கேட்டுக்கொள்கின்றேன் என கேட்க்க முடியுமா? நிச்சயமாக இல்லை. குறித்த நாட்டிலே வசிக்கும்போது அந்நாட்டின் சட்டம் அனைவருக்கும் தெரிந்திருக்கவேண்டியது அவசியமாகும் - இது ஒரு பூகோள சட்டம்.

    குறித்த பெண்ணை கல்லால் எறிந்து கொலை செய்யச்சொல்லி அந்நாட்டின் சட்டம் விதிக்குமாக இருந்தால் அதனை நாம் விமர்சிக்க உரிமையோ தகுதியோ இல்லை.

    ஆனால் அந்நாட்டின் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் முறையை நாம் விமர்சிக்கலாம். உதாரணமாக, அமெரிக்க பெண்ணொருவர் குறித்த குற்றத்தை செய்திருந்தால் அப்பெண்ணுக்கான தண்டனை நிறைவேற்றப்படாது. இது உண்மையில் கண்டிக்கப்பட வேண்டியது. ஏனெனில் இங்கு பாரபட்சம் இருக்கின்றது என்பது உண்மை.

    ஆகவே இப்பிரச்சினை எதிர்காலத்தில் ஏற்ப்படாமல் இருக்க வேண்டுமானால், ஒருவர் வெளி நாட்டுக்கு செல்லும்பொழுது அந்நாட்டு சட்டங்களை அறிந்திருக்க செய்யவேண்டும். மேலும், இலங்கை ஒரு வறிய நாடு என்பதாலும், அவர்களுக்கு பலமான பிராந்திய பலம் இல்லை என்பதாலும் இவ்வாறு அநீதி இழைக்கப்படுவதை தெரிந்தும் எமது நாட்டு மக்களை சவூதிக்கு தொழிலாளர்களாக செல்ல அனுமதிப்பது நிறுத்தப்படல் வேண்டும்.

    ஷரியா சட்டமோ அல்லது வேறு வகையான சட்டமோ, அதனை நியாயமாக நடைமுறைப்படுத்தும்போதே அந்த சட்டத்திற்கு புற உலகிலிருந்து வரவேற்ப்பு இருக்கும். அல்லது அப்படியான சட்டம் அநீதிக்குள்ளான மக்களதும் நாட்டினதும் பார்வையில் தனித்துவமற்ற பக்கச்சார்பான சலுகைச்சட்டம் என்றே நோக்கப்படும். சவூதி அரசு நடைமுறைப்படுத்தும் சட்டம் இஸ்லாமியர்களின் பார்வையில் அவர்களது பண்பாடுகளுடன் ஒன்றிணைந்த ஒரு விடயமாக இருப்பதால். சட்டத்தை விமர்சிப்பது நல்லதல்ல. ஆயினும் அதனை நாட்டுக்கு நாடு வேறுபாடாக நடைமுறைப்படுத்தும் சவூதி அரசை கண்டிக்கவோ, அல்லது சவூதிக்கு தொழிலாளர்களை அனுப்புவதை நிறுத்தவோ நமக்கு உரிமை இருக்கிறது. அப்படியாயின், முதலில் நமது நாட்டில் உள்ள வறுமை, வேலையில்லாப் பிரச்சினை போன்றவற்றை இல்லாமல் செய்ய முடியாது ஆயினும் மிகவும் குறைவான நிலைக்கு கொண்டுவர ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுப்பது சாலச்சிறந்தது.

    இதுவே ஒரு நடுநிலையான மனிதனாக என்னால் கூறமுடியும்.

    ReplyDelete

Powered by Blogger.