கொலைச் சூத்திரதாரி தாம் என்பதை, மஹிந்த ராஜபக்ஷ உறுதிப்படுத்திக் கொண்டுள்ளார் - விக்கிரமபாகு
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கொலைச் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி தாம் என்பதை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உறுதிப்படுத்திக் கொண்டுள்ளாரென நவசமசமாஜ கட்சியின் செயலாளர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன தெரிவித்தார்.
கொழும்பில் அமைந்துள்ள நவ சமசமாஜ கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
முன்னாள் ஜனாதிபதியும் குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக் ஷ அண்மையில் வெலிக்கடை சிறைச்சாலைக்குச் சென்று ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட விவகாரத்தில் குற்றவாளிகளாக கைதாகியுள்ள 5 இராணுவ வீரர்களை சந்தித்துள்ளார்.
இவர்கள் இராணுவப் புலனாய்வு பிரிவில் கடமையாற்றியவர்கள் என்பதோடு இவர் கள் மீதான குற்றச்சாட்டுக்கள் தற்போது பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் கடந்த அரசாங்கத்தின் காலத்திலேயே இந்தக் கொலை இடம் பெற்றுள்ளமையினால் கொலையின் பின்புலத்தில் அரசியல் காரணிகள் இருக்கலாம் என்ற சந்தேகங்களும் நிலவுகின் றன.
இவ்வாறிருக்க முன்னாள் ஜனாதிபதி, அவர்கள் மீது அனுதாபம் காட்டி அவர்களை சென்று பார்வையிட வேண்டிய அவசியம் என்ன என்ற சந்தேகம் எமக்கு தோன்றியுள்ளது.
எமது பார்வையில் இந்தக் கொலையின் மிக முக்கிய சூத்திரதாரி மஹிந்த தான் என்பதை அவரே நிரூபித்துக்கொண்டுள்ளார் என்பது விளங்குகின்றது.
அவர் தாம் நாட்டை காப்பாற்றிய இராணுவ வீரர்கள் சிறை யில் வாடுவதையிட்டு கவலையடைவதால் அவர்களை பார்வையிட சென்றேன் என்ற பாணியில் பேசு கிறார். ஆனால் அவர் கள் மட்டும் எமது நாட்டை காப்பாற்றிய வீரர்கள் இல்லை என்பதை அவர் கவனத்தில் கொள்ள வேண் டும்.
ஆயிரக்கணக்கிலான இராணுவ வீரர்கள் நாட்டில் நிலவிய 30 வருட யுத்தத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக போராடினர். அவர்களை பார்வையிட வேண்டும் என்ற கருணை உள்ளம் ஏன் மஹிந்தவுக்கு வரவில்லை?
கைதாகியுள்ள நால்வருடனும் உள்ள தொடர்புதான் அவர்கள் மீது மஹிந்தவுக்கு கருணையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த யுத்த வெற்றியின் முக்கிய புள்ளிகளில் ஒருவர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா. அவரை ஏன் மஹிந்த அரசாங்கம் மோசமான முறையில் சிறையிலடைத்து அவரை வருத்தியது? அவர் ஒரு யுத்த வெற்றியின் முக்கியஸ்தர் என்பதும் மஹிந்தவுக்கு விளங்கவில்லை.
இவ்வாறு செயற்பட்டதன் பின்பு தற்போது இராணுவத்தினரை பாதுகாக்க வேண்டும் என்று பேசும் உரிமையும் மஹிந்தவுக்கு இல்லை.
அதனால் தற்போது அவர் எக்னெலிகொட கொலை விவகாரத்தின் கைதிகளை சென்று பார்வையிட்டது மட்டுமல்லாது அவரின் ஆதரவு அணியும் குறித்த கைதிகளை பார்வையிட செல்கின்றது. அதனால் தற்போது எக்னெலிகொட கொலைக்கு ஆணையிட்டவர் மஹிந்த தான் என்பதை அவரே ஊர்ஜிதப்படுத்திக் கொண்டிருக் கின்றார் என்றார்.
ராஜபக்ச அன் கோ ஆசீர்வாதாமோ, ஆதரவோ, உத்தரவோ இல்லாமல் இப்படியான சம்பவங்கள் நடப்பது மிகவும் அரிதே. ராஜபக்சவுக்கு துணிந்து விரல் நீட்டும் விக்கிரம பாகு தோழருக்கு எமது salute.
ReplyDelete