Header Ads



பொலிஸ் ஊடகப் பேச்சாளரின், அருமையான கருத்துக்கள்..!

ஊடக நிறுனங்களுக்கு இடையில் நிலவி வரும் கடுமையான போட்டித் தன்மை ஆபத்தானது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர எச்சரிக்கை விடுத்துள்ளார்.

குற்றச் செயல் செய்தி அறிக்கையிடலில் ஊடகங்களின் பொறுப்பு என்ற தொனிப்பொருளில் கொழும்பு பத்திரிகை நிறுவன கேட்போர் கூடத்தில் நடைபெற்ற கருத்தரங்கொன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தகவல்களை அறிந்து கொள்ளும் உரிமை உன்னதாமானது என்ற போதிலும் செய்தி அறிக்கையிடலின் சட்டத்தன்மை என்ற ஒர் கோணம் உண்டு என்பதனை புரிந்து கொள்ள வேண்டும்.

கௌரவமான ஊடக நிறுவனங்கள் தகவல்களை அறிந்து கொள்ளும் உரிமை மற்றும் செய்தி அறிக்கையிடலின் சட்டபூர்வ தன்மை ஆகியனவற்றை சமனிலைப்படுத்தி செய்தி வெளியிடும் கடப்பாட்டையும் பொறுப்பினையும் கொண்டிருக்கும்.

ஏனைய ஊடக நிறுவனங்களை பின்தள்ளி மக்களின் ஆர்வத்தை தூண்டும் வகையிலான செய்திகளை மக்களுக்கு வழங்கும் போட்டித் தன்மை ஆரோக்கியமான நிலைமையாக கருதப்பட முடியாது.

இவ்வாறான தன்மை ஊடக நிறுவனங்களை ஆபத்தான நிலைமைக்கே இட்டுச் செல்லக்கூடும்.

போட்டி நிலைமை காரணமாக ஒரு ஊடகம் மற்றுமொரு ஊடகத்தை பின்தள்ள முயற்சிக்கின்றது.

பொலிஸ் சீருடை முறையாக பயன்படுத்தாமை குறித்து சட்ட நடவடிக்கை எடுக்க நேரிட்டது.

ஊடக நிறுவனங்களுக்கு எதிராக பொலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற போதிலும் பொதுமக்கள் ஊடகங்கள் மீது முறைப்பாடு செய்யும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

மக்களின் தகவல்களை அறிந்து கொள்ளும் சட்டத்தை மதிக்க வேண்டிய அதேவேளைää நபர்களின் அந்தரங்கத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் செய்தி அறிக்கையிட வேண்டியது ஊடகங்களின் தார்மீக பொறுப்புக்களில் முக்கியமானது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.