ஞானசார மீது நடவடிக்கை எடுங்கள் - மைத்திரி + ரணிலுக்கு றிசாத் அவசர கடிதம்
-Ashraff.A. Samad-
புனித குர் ஆனை தடைசெய்யவேண்டும் என பொது பல சேனாவின் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேர தெரிவித்துள்ள கருத்து இனங்களுக்குக்கிடையே பாரிய விரிசலை ஏற்படுத்தக் கூடியதெனவும் இது தொடர்பில் உடனடி கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சருமான றிஷாட் பதியுதீன் அவசர கடிதம் ஒன்றை ஐனாதிபதி மற்றும் பிரதமருக்கு அணுப்பியுள்ளார் அமைச்சர் எழுதியுள்ள அவசர கடித்த்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாவது ,
புனித குர் ஆனை தடைசெய்யவேண்டும் என பொது பல சேனாவின் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேர தெரிவித்துள்ள கருத்து இனங்களுக்குக்கிடையே பாரிய விரிசலை ஏற்படுத்தக் கூடியதெனவும் இது தொடர்பில் உடனடி கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சருமான றிஷாட் பதியுதீன் அவசர கடிதம் ஒன்றை ஐனாதிபதி மற்றும் பிரதமருக்கு அணுப்பியுள்ளார் அமைச்சர் எழுதியுள்ள அவசர கடித்த்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாவது ,
இனவாத மதவாத அடிப்படையில் குரோத உணர்வைத்தூண்டும் இக்கருத்துக்கள் முஸ்லிம்களை புண்படுத்தியுள்ளது உலக முஸ்லிம்கள் புனித குர்ஆனை உயிரினும் மேலாக கருதுகின்றனர்.
அவர்களின் புனித திருமறையை எவரும் கொச்சைப்படுத்தவோ இழிவு படுத்தவோ ஒரு போதும் அணுமதிக்கமாட்டார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள் பல்லின மக்கள் வாழும் இந்நாட்டில் ஏனைய இனங்களையும் மதங்களையும் மதித்து நடப்பவர்கள் முஸ்லிம்கள்.குறிப்பாக இலங்கையில் வாழும் பொளத்த மக்களுடன் அந்தியோன்னியமாகவும், சகோதரவாஞ்சையுடனும் வாழ்ந்துவருபவர்கள் முஸ்லிம்கள் நாட்டின் தேசிய ஒருமைல்பாட்டுக்கு அவர்கள் ஒருபோதும் குந்தகம் விளைவித்தவர்கள் அல்லர் தமது தாய் நாட்டுக்கு என்றுமே விசுவாசமாக உழைத்து, வாழ்ந்துவரும் முஸ்லிம்மக்கள் மீது அண்மைக்காலமாக இனவாத சக்கிகள் சேறுபூசி வருகின்றன பொதுபல சேன போன்ற இனவாத இயக்கங்கள் கடந்த ஆட்சியில் முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விட்டிருந்த அராஜகங்களை கட்டுப்படுத்த கடந்த அரசு எந்த விதமான நடவடிக்கையும் எடுக்க வில்லை.
உங்கள் தலைமையிலான நல்லாட்சியில் இனங்களுக்கிடையே மீண்டும் நல்ல உறவு துளிர்விட தொடங்கியுள்ளது இந்த சுமூக நிலையை குழப்பி இனங்களுக்கிடையே முறுகலை ஏற்படுத்துவதே பொதுபல சேனாவின் நோக்கமாகும். பொதுபல சேனாவின் இந்த காட்டுமிராண்டித்தனமான செயல்களுக்கு நல்லாட்சியில் இடமளிக்ககூடாது, புனித குர்ஆன் தொடர்பில் ஏற்கனவே பொதுபல சேனா தெரிவித்திருந்த சர்ச்சையான கருத்துக்களால் நொந்துபோய்யிருந்த முஸ்லிம் சமூகம் குர்ஆனை தடை செய்ய வேண்டும் என்ற இந்த இயக்கத்தின் விஷக்கருத்துக்களால் மீண்டும் உறைந்துபோய் இருக்கின்றது என்பதை உங்கள் மேலான கவத்திற்கு கொண்டுவருகின்றேன்.
Why the sri lankan muslims are still on deep sleep? Wherever in the world someone insult the holy Quran or our prophet (pbuh) we doing strike and showing our oppose. But in our own country, one foolish person and his group keep insulting our holy Quran, we just keep watching it, all the muslims in sri lanka should show our oppose against this insult/allegation to our government as well as the world. We should make international community to join us to oppose for this insult /allegation.
ReplyDeleteOther muslim minister will not arise voice for bbs only Mr rishard badurdeen
ReplyDelete15:9. திண்ணமாக, இந்த நல்லு ரையை நாம்தாம் இறக்கிவைத்தோம். மேலும், நாமே இதனைப் பாதுகாப்போராகவும் இருக்கின்றோம்.
ReplyDeleteகுர்ஆனைப்பாது காப்பது அல்லாஹ்(சுபு).
நாம் யாரும் பதட்டப்படவோ, படம்காட்டவோ தேவையில்லை.
பாராளுமன்றத்தில் ஆரம்பித்தார்கள் ஏதோ சதி நடக்கிறது இணைந்து போராடுவோம்.
ReplyDeleteNo Option...kill gnanasara
ReplyDeletepetty pambai uyir koduttu eluppuwazu SLTJ THAN IVARGALTHAN PERIYA ARIVALIGAL ENDRU NINAIPPU , IVARGALAI ALLAH THAN KAPPATTAVENDUM.
ReplyDeleteHello Mahendran Gawrysankar, do u know the meaning of kafir in Arabic? First of all try to know the meaning of kafir n then write ur comments.
ReplyDeleteமூக்கு கொடப்பா இருந்தா இப்டியலாம் யோசிக்க தோனும்.
ReplyDeleteOver Mahendran's comment: Calling someone "Infidel or Kaafir" is not an insult. Basically it means: Person who Rejects".The first is in English, the second is in Arabic. That is it.Ganaserar's comments are so worse, hateful and racist. I want the True religious Budhists corner him.If the God decides,he will insult him and none can save him.
ReplyDeleteரிப்கான் நவாஸ், கொஞ்சம் மூளையை பாவிக்கவும். ஆங்கிலத்தில் வேறு எழுதி இருக்கின்றீர்கள். இது இஸ்லாம் காட்டிய முன்மாதிரி அல்ல. ஐசிஸ் முன்மாதிரி.
ReplyDelete@ Sheik David True Said Bro!
ReplyDeleteமகேந்திரன் கௌரிசங்கர் அவர்களே,
ReplyDeleteகாபிர்கள் என்பது அராபிய மொழியில் 'எங்களது இறை நம்பிக்கையை பின்பற்றாதோர்' என்பதே அர்த்தம். அரேபியாவில் இஸ்லாம் நம்பிக்கை பொதுவானதாகையால் இங்கு இஸ்லாமிய இறை நம்பிக்கைக்கு உடன்படாதவர்களை காபிர்கள் என்று அழைத்தார்கள். அது ஒருவகையில் இனவொதுக்கமாக கொள்ளப்பட்டாலும் இழிவுபடுத்துவதாக இருக்காது என்றே நான் நம்புகின்றேன்.
ஏன் யாழ்ப்பாணத்தில் இந்துக்கள் செறிந்துவாழும் ஒரு பகுதியில் ஒரு முஸ்லிம் நண்பரைக்காட்டி இவர் இந்துவல்ல ஒரு முஸ்லிம் என்று நாங்கள் சொன்னால், எங்களது மக்கள் வித்தியாசமாக பார்ப்பார்கள். குறிப்பாக சொன்னால் அந்நபரை எதோ வேற்றுக்கிரக வாசியைப்போல் பார்ப்பார்கள். ஒருமுறை எனது முஸ்லிம் நண்பர் ஒருவரை நான் எனது உறவினர் வீட்டிற்கு கூட்டி சென்றேன். என்னை உள்ளே கூப்பிட்ட எனது உறவினர் '…இதுகளை எல்லாம் ஏன் இங்கை எல்லாம் கூட்டி வாராய்?, சிங்களவங்கள் என்றாலும் பரவாயில்லை... இந்த சோ... எல்லாம் வீடு வாசலுக்கை அண்டக்கூடாது...' என்று கூறினார். நான் எனது உறவினரின் அடிமட்ட முட்டாள்த்தனத்தையும், அவரது படிப்பறிவில்லாத மனோநிலையும் கண்டு உள்ளுக்குள்ளே கவலைப்பட்டேன். அதற்காக எந்தவொரு முஸ்லிமும் அதனை அவமானமாக கொள்ளமாட்டான். மாறாக தன்னை முஸ்லிம் என்று நிரூபிக்கவே முயலுவான்.
'Infidel' என்பது நாம் பின்பற்றும் மதத்தை சாராத என்பதே சரியான அர்த்தம். ஆகவே எங்களைப் பொறுத்தவரைக்கும் இந்துக்களல்லாதவர் அனைவரும் Infidels என்றே கொள்ளப்பட வேண்டும். இதில் எங்கே நீங்கள் கூறுகின்ற Insult இருக்கின்றது?
ஞானசார முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல உண்மையான பௌத்த மதம் உட்ப்பட அனைத்து மதங்களுக்கும் எதிரானவர். எந்தவொரு மதமும் வன்முறையை வழிகாட்டவில்லை. இன்று தமிழர்கள் ஐரோப்பா, அமெரிக்க, அவுஸ்த்ரேலிய என்று பரந்துவாழும் சூழலில் அனேகமாக எல்லா நாடுகளிலும் நமது சமய கலாச்சார பண்பாடுகளை பின்பற்றும் சூழல் இருக்கின்றது. ஏனெனில் அங்கெல்லாம் ஞானசார போன்ற துவேசிகள் அளவுக்கதிகமாக செல்வாக்கு காட்ட முடியாது. நாம் எப்படி எமது மத நம்பிக்கைகளை கடைப்பிடிக்க முனைகிறோமோ அவ்வாறே மற்றவர்களும் செய்வதற்கு இடம்தந்தால் ஒருவரும் பிரச்சினை இல்லாமல் இருக்கலாம்.
சிலநாடுகளில் மதச் சுதந்திரம் இல்லை என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். உதாரணமாக சவூதி அரேபியாவில் போய் கோவில் கட்டி வழிபட முடியாது. அதற்காக முஸ்லிம்கள் எல்லோரையும் அடிப்படைவாதிகளாக சித்திகரிக்க முடியாது. ஏனெனில் மலேசியாவில் இந்துக்களின் பிரபல்யமான கோவில்கள் நிறையவே இருக்கின்றன.
ஒருகாலத்தில் இந்து சாம்ராட்சியமாக இருந்த நேபாளம் இன்று நாகரிக சூழலில் இணைந்து மதச்சார்பற்ற நாடாக மாறியுள்ளது என்னை பொறுத்தவரையில் சரியானதே. ஆனால் துரதிஸ்டவசமாக காம்பியா போன்ற தினசரி பத்திரிகைகளை கூட அச்சிட்டு வெளியிடமுடியா நிலையில் இருக்கும் நாட்டை இஸ்லாமிய குடியரசாக மாற்றியவுடன் பல முஸ்லிம் நண்பர்கள் மகிழ்ச்சிபொங்க கருத்து வெளியிட்டனர். இங்குதான் எனக்கும் அதிகமாக கோவம் வந்தது ஏனெனில் இலங்கையை பௌத்தக் குடியரசாக மாற்றினால் நாம் (இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ) அமைதியாக இருப்போமா? இந்தியாவை இந்துக்குடியரசாக மாற்றினால் கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் மகிழ்ச்சியாக இருப்பார்ர்களா?
எனக்கு வந்தால் ரத்தம் மற்றவருக்கு வந்தால் தக்காளிச் சட்னி என்ற பிரபல சினிமா நகைச்சுவயைப்போல ஒவ்வொரு மதத்திலும் குறிப்பிட்ட விகிதத்தினர் இருக்கின்றார்கள். அத்தகையோர் காலப்போக்கில் உலகமயமாதல், கல்வி வளர்ச்சி, தொழில்நுட்ப்ப வளர்ச்சி போன்றவற்றால் தமது தீவிர அடிப்படை வாதத்தை கைவிட்டு பகுத்தறிவுடயவராக நிச்சயம் மாறுவார்கள். ஆகவே பொதுமைப்படுத்தப்பட்ட விரக்தி எண்ணங்களை ஒதுக்கிவிட்டு மனிதனது நாகரிக பண்பை அனைவரும் பேணி நடந்தால் பிரச்சினை இல்லை. எல்லா நாடுகளும், நாடுகளில் உள்ள மக்களும் காலப்போக்கில் நிச்சயம் சகிப்புத்தன்மயுடைய நாடுகளாக மாறும். அதுவரையில் மத முரண்பாடுகளால் பலவுயிர்கள் துன்புறும்.