Header Ads



மத ரீதியான அசம்பாவிதங்கள் அனைத்தும் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது - ஹக்கீம்

இன மத ரீதியான எந்தவித பிரச்சினைகளுமின்றி புதியதொரு அரசியல் கலாசாரம் உருவாக்கப்பட்டு மக்களுடைய பெரும்பாலான தேவைகள் நிறை

இன்று (30) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு இது தொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

2010, 2011, மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் ஒவ்வொருநாளும் எங்காவது எந்த மூலையிலாவது மத ரீதியான பிரச்சினைகள்,  தாக்குதல்களும் அசம்பாவிதங்களும் ஏற்படுகின்ற ஒரு மோசமான சூழலை அனைவரும் எதிர்கொண்டிருந்தனர்.  அவ்வாறான சூழலை உருவாக்கிய ஆட்சியாளர்களை நாம் ஒதுக்கி விட்டு புதியதொரு அரசியல் கலாசாரத்தினை உருவாக்கியுள்ளோம்.

வெளிப்படைத் தன்மையுள்ளதொரு அரசியல் கலாசாரத்தினை அறிமுகப்படுத்தியுள்ளோம். இந்த வெளிப்படையான அரசியல் கலாசாரத்தின் மூலம் நாட்டில் இடம்பெற்ற மத ரீதியான அசம்பாவிதங்கள் அனைத்தும் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.

அது மட்டுமன்றி சர்வதேசத்துக்கு முன் சென்று ஒவ்வொரு வருடமும் குற்றவாளிகள் போல் குற்றவாளி கூண்டில் நிற்கும் தேசியமாய் இருந்த நாங்கள் இன்று தைரியமாக அந்த சர்வதேச சமூகத்துக்கு முன்னால் நிலைத்து நிற்கும் ஜனநாயக பாரம்பரியத்துடன் உள்ளோம்.

இனங்களுக்கிடையிலே சமத்துவம் சகோதரத்துவம் இணக்கப்பாடு உருவாகின்றதொரு புதிய அரசியல் கலாசாரத்தினை உருவாக்குகின்ற தகைமை இந்த ஆட்சியாளர்களுக்கு உள்ளது என்று பிரதானமான வல்லரசுகள் மற்றும் இந்நாட்டுக்கு வருகை தருகின்ற மிக முக்கியமான ராஜதந்திரிகள் எமது ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் பாராட்டுச் சொல்லுகின்றதொரு புதிய யுகத்தை நாங்கள் உருவாக்க கூடியதாக அமைந்துள்ளது.

அத்துடன் ஊடகவியலாளர்களுக்கு மிகவும் பயன்தரக்கூடிய தகவல் அறியும் சட்டம் அடுத்து வரும் ஓரிரு மாதங்களில் பாராளுமன்றத்தினூடாக அமுல் படுத்தப்படவுள்ளது. இதன் மூலம் ஊடகவியலாளர்கள் அனைவரும் எவரிடத்திலிருந்தும் அனைத்து தகவல்களையும் பெற்றுக் கொள்ளமுடியும்.

எந்த ஆட்சியாளர்களும் ஊடகவியலாளர்களிடமிருந்து எந்த தகவலையும் மறைக்க முடியாது. இதன் மூலம் ஊழல் கலாசாரம் கொண்ட சமூகத்தினை முழுமையாக களைந்தெடுக்க முடியும்.

அத்துடன் புதிய யாப்பு திருத்தம் ஒன்றினை அறிமுகப்படுத்தவுள்ளோம். புதிய தேர்தல் முறையொன்று அறிமுகப்படுத்தவுள்ளோம். எல்லா சமூகங்களும் சமமான பிரதிநிதித்துவத்தினை பாராளுமன்றத்திலும் தெரிவு செய்யப்பட்ட சபைகளிலும் பிரதிநிதித்துவப்படுத்த முடியும்.

இவற்றினை குழப்புவதற்கு சில சதி முயற்சிகள் திரைமறைவிலே மேற்கொள்ளப்படுகின்ற போதும் அவற்றினையெல்லாம் முறியடித்து மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட அனைத்து கட்சிகளும் இணைந்த இந்த தேசிய அரசாங்கம் முழு மூச்சுடன் செயற்பட்டு வரும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
வேற்றப்பட்ட அரசியல் கலாசாரத்தில், தற்போது ஒரு வருடத்தினை நெருங்கியுள்ளோம் என நகரத் திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

1 comment:

  1. Mr. SLMC leade keep one thing in your mind, you were enjoying perks and privillage while SL Muslims were attacked by your own MR & Co. Government.

    You don't have rights to claim credit for the current situation in Sri Lanka. Still you must learn from Br. Rishad Badiudeen.

    ReplyDelete

Powered by Blogger.