Header Ads



ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தின், தாக்கமே கண்டி நிலநடுக்கம் - நிபுணர்கள் தெரிவிப்பு

கண்டியின் பல பகுதிகளில் நேற்றிரவு (28) ஏற்பட்ட நில அதிர்வு, ஆப்கானிஸ்தானின் ஹிந்துகுஷ் பகுதியில் ஏற்பட்ட பூமியதிர்வின் தாக்கம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

கண்டி மெததும்பர பிரதேச செயலகத்திற்குட்பட்ட பல பகுதிகளில் நேற்றிரவு 10.10 மணியளவில் இந்த நில அதிர்வு பதிவாகியிருந்தது.

பல்லேகலேயிலிருந்து 6 கிலோ மீற்றர் வரை இதன் தாக்கம் உணரப்பட்டதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் நிபுணர் மஹிந்த செனவிரத்ன தெரிவித்தார்.

கண்டி, எல்லேபொல, வெவேகம, நிதுலேமட, மாபெரிதென்ன, கும்புக்கந்துர, பாரகம, செனரத்வெல உள்ளிட்ட பகுதிகளில் இந்த நில அதிர்வு அதிகளவில் உணரப்பட்டுள்ளது.
பேராதனை பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் உதேனி பண்டார இது குறித்து தெரிவித்ததாவது;

    ஆப்கானிஸ்தானின் ஹிந்துகுஷ் மலைத் தொடருக்கு அருகில் நேற்று முன்தினம் நில அதிர்வு பதிவாகியிருந்தது. இதனையடுத்து, இந்திய – அவுஸ்திரேலிய சிறுதட்டு அசைவு ஏற்பட்டுள்ளது. எமது கடற்பிராந்தியத்திலிருக்கும் நில வெடிப்புகளிலும் அதற்கேற்றவாறு அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன. இதுவே, நில அதிர்வாக மாறி அதன் அதிர்வலைகள் கிராமங்கள் ஊடாக உணரப்படுவதற்கு அதிக வாய்ப்புண்டு. இதன் மையம் எமது கரைக்கு அப்பாலுள்ள பிரதேசத்திலிருந்து இலங்கை கடலை அண்மித்து காணப்படும் சிறுதட்டில் காணப்படுவதுடன், அங்கிருந்து ஏற்பட்ட அதிர்வலைகளே பெரமுனு மக்களால் உணரப்பட்டுள்ளது. உண்மையிலேயே விக்டோரிய பிரதேசத்தில் நில அதிர்வு ஏற்படவில்லை. இந்த அதிர்வலைகள் பெரமுனு கிராமத்தினூடாக பயணித்துள்ளமையே காரணமாகும்.

No comments

Powered by Blogger.