ஜப்னா முஸ்லிமில் கொமன்ட் பண்ணும், முஸ்லிம் சகோதரர்களுக்கு..!
-அமீர் உமைத்-
அல்லாஹ்வின் சாந்தியும், சமாதானமும் உங்கள் அனைவர் மீதும் உண்டாவதாக.
நீங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பின்னணியைக் கொண்டவர்களாக, வெவ்வேறு சமூக, சூழல்களில் வாழ்பவர்களாக இருக்கக் கூடும். ஆனாலும் உங்களின் கருத்துக்களை உங்களது சமூக சூழலை சேர்ந்தவர்கள் மட்டுமே வாசிப்பதில்லை, எல்லோருமே வாசிக்கின்றார்கள்.
கொழும்பில் பல்லின மக்கள் மத்தியில் வாழ்கின்ற முஸ்லிமின் சமூக சூழலுக்கும், கிழக்கில் காத்தான்குடி போன்ற ஒரு முஸ்லிம் செறிவு நிறைந்த ஒரு சூழலில் வாழ்கின்ற முஸ்லிமின் சமூக சூழலுக்கும் பாரிய வேறுபாடு உண்டு. ஆனால், பொது ஊடகம் ஒன்றில் கருத்து எழுதும் பொழுது, அந்தக் கருத்து பொதுவான அனைவரது சிந்தனைக்கும் பொருத்தமானதாக அமைய வேண்டும்.
எனினும் இந்த இணையத்தளத்தில் கருத்து பதியும் சிலர், இஸ்லாத்தை பாதுகாக்கின்றோம் என்று நினைத்துக் கொண்டு மிகக் குறுகிய வட்டத்துக்குள் இருந்துகொண்டு கருத்து பதிந்து, இஸ்லாத்தை பற்றிய நல்ல எண்ணங்களைக் கூட பாதிப்படைய வைக்கின்றனர்.
நான் தலைநகரில் பல்வேறு இனத்தவர்கள், மதத்தவர்கள், அதிலும் குறிப்பாக தமிழை தாய்மொழியாக கொண்டவர்கள் பணியாற்றும் நிறுவனம் ஒன்றில் பணியாற்றுகின்றேன்.
ஜப்னா முஸ்லிம் தடை செய்யப்பட காலத்தில் இருந்து இந்த இணையத்தளம் எனது நிறுவன பணியாளர்கள் மத்தியில் பார்க்கப்படும் ஒரு இணையத்தளமாக இருந்து வருகின்றது.
இந்நிலையில், நிலவன் மக்ஸ் போன்ற சிலர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்கின்றோம் என்கின்ற போர்வையில் நம்மவர்கள் சிலர் பதியும் கருத்துக்கள் எதிர்மறையான விளைவுகளையே உண்டாக்குகின்றன என்பதை நிதர்சனமாக உணர்கின்றேன். எனது சக பணியாளர்களின் கருத்துக்களில் இருந்து இதனை தெளிவாக உணர முடியுமாக உள்ளது.
ஒரு விடயத்தில் பதில் தெரியாவிட்டால், சரியான பதிலை உண்மையாகவே தெரிந்த ஒருவரிடம் கேட்டு பதிவதே சரியாகும், அதனை விடுத்து கேள்வி கேட்டவரை டார்கெட் பண்ணுவது, அவரை குறிவைத்து தாக்கி மட்டம் தட்ட முயல்வது மிகவும் அநாகரீகமானது. ஏனெனில் பலபேர் இங்கே என்ன நடக்கின்றது என்பதை அவதானிக்கின்றனர் என்பதனை மறந்து விடக் கூடாது.
இஸ்லாம் உட்பட எல்லா மதங்களும், அரசியல் கட்சிகள், கொள்கைகள் போன்று பொது விடயங்கள் ஆகும், ஆகவே விமர்சனங்கள், கேள்விகள் எழுவது நியாயமே. அவற்றை நியாயமாக எதிர்கொள்ள வேண்டுமே தவிர, அநாகரீகமாக எதிர்கொள்ளக் கூடாது, ஏனெனில் இஸ்லாம் என்பது இறைவனின் இறுதி வேதம் ஆகும். இறைவனின் இறுதி வேதம், ஒரு சிலரின் அநாகரீகமான பதில்களால் பிழையாக சித்தரிக்கப் படுவதை மெளனமாக பார்த்துக்கொண்டு இருப்பது, பாவத்திற்கு துணை போவது போன்றதாகும்.
நபி (ஸல்) அவர்களுடைய காலத்தில் நபி அவர்களிடம் யூதர்கள், கிறிஸ்தவர்கள் பல்வேறு சிக்கலான கேள்விகளை கேட்டு இருக்கின்றனர், நபி (ஸல்) அவர்களும் அவற்றிற்கு பதில் சொல்லி இருக்கின்றார்களே தவிர, கேள்வி கேட்டவரை மட்டம் தட்டி அனுப்ப முயலவில்லை. பதில் தெரியாத பொழுது பிறகு வாருங்கள் என்று அனுப்பி, வஹி வந்த பின்னர், அதற்கான பதிலை வழங்கி இருக்கின்றார்கள். இது தொடர்பான ஹதீஸ்களை உலமாக்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
ஆகவே, ஜப்னா முஸ்லிம் இல் கருத்து, பதில் எழுதுகின்ற சகோதரர்களை கண்ணியமாகவும், நாகரீகமாகவும் நடந்து கொள்ளுங்கள் என்று சகோதர உரிமையுடன் கேட்டுக் கொள்கின்றேன்.
கேள்வி கேட்கும் உரிமையை மறுக்காதீர்கள், அப்படி மறுப்பது இஸ்லாம் காட்டித் தந்த வழிமுறை அல்ல.
அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழியை காட்டுவானாக.
இஸ்லாத்தின் கண்ணியத்தை வெளிப்படுத்த வேண்டியதும் பாதுகாக்க வேண்டியதும் ஒவ்வொரு முஸ்லீமினதும் கடமை.
ReplyDeleteஇஸ்லாம் கண்ணியமானது முஸ்லீம் நாகரீகமான மனித நேயம் கொண்டவன்.
நாம்தான்,நமது செயல்கள்மூலம் இதனை உணர்த்தவேண்டும்.
Insha allah.jazakallah your adviced
ReplyDeleteதங்களை அதி மேதாவிகள் என்று நினைத்துக் கொண்டு அறிவீனமாகவும், அநாகரீகமாகவும் கருத்து எழுதும் சிலர் இனியாவது திருந்தட்டும். இந்த இணையத்தளத்தை பல்வேறு பட்டவர்களும் பார்க்கின்றார்கள் என்பதை புரிந்து கொள்ளட்டும்.
ReplyDeleteThis is a public site, so those who are commenting here on behalf of Islam should be polite and genuine.
ReplyDeleteThanks for the article.
நீங்கள் கூறுவது உண்மை. ஆனால் அவரும் அவரிடம் கேள்விகளுக்கு பதில் கூறினால் பிரச்சினை இல்லை.
ReplyDeleteஅவர் கேட்கும் கேள்விகளுக்கு அவர் எவ்வாறு இங்கு பதிலை எதிர்பாக்கிறாரோ அவ்வாறே அவரிடம் கேட்கப்படும் கேள்விகளிக்கு அவர் இங்குதான் பதிலளிக்க வேண்டும். மாறாக அவரின் email இல் தொடரபுகொள்ளச் சொல்லி சவால் விடுவது வேடிக்கையாக இருக்கின்றது.
இன்று E-mail ஐ விடவும் துரிதமான , இலகுவான ஒன்றுதான் Whatsapp , vibes போன்றவைகள். ஆனால் அதில் அவர் வர மறுக்கிறார்.
மற்றது எந்த ஒரு விவாத்த்துக்கம் basic rules and வறையரை இருக்கும். அவர் எந்த மந்தை சார்ந்தவர் என்று கேட்டாலோ, அல்லது நாத்திகனா என்று கேட்டாலோ பதிலை காணம்.
இல்லாவிட்டால் " நான் ஒரு மனிதன் " என்று கூறுவார். என்னமோ இங்குள்ள மற்ற எல்லாருமே பிசாசுகள் போல. அவருக்கு நாங்கள் இஸ்லாமியர்கள் என்பது நன்றாக தெரியும் அதைப்போல அவர் எந்த மத்த்தை சார்ந்தவர் அல்லது நாத்திகனா என்று தெரிந்தால் தானே அவரின் கேள்விகளுக்கு பதிலையோ, அல்லது அவரிடம் கேள்விகளையும் கேட்க முடியும்.
அவர் எப்பொழுதுமே Saudi ஐ தாக்கிப் பேசுகிறார். அதனால் தான். Saudi ஐயும் India ஐயும் ஒப்பிட்டு கேள்விகள் கேட்டுக்கொண்டிருக்கிறேன் பதில் தான் கிடைப்பதில்லை. அவரின் கேள்விகளுக்கு பதிலை எதிர்பார்க்கும் அவர், அவரிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கும் பதில்களை எதிர்பார்ப்பார்கள் என்று தெரிந்துகொள்ள வேண்டும்.
Some General Question to him.
1. பாலைவனத்து மார்கத்தை பின்பற்றும் Saudi Arabia ஐ விட அஹிம்சை போதிக்கும் இந்தியாவில் பெண் சிசுக்கொலைகள் அதிகம் ஏன்?
2. அரபிகள் காட்டுமிராண்டிகள் என எதிர்மறையாக கூரும் அவர் அமெரிக்காவில் 2 நிமிடத்துக்கு ஒரு முரை ஒரு கற்பழிப்பு நடக்கின்றது. அப்ப யாரு காட்டுமிராண்டிகள்?
3. "யாதும் ஊரே யாவரும் கேளீர் " தமிழ் நாட்டில் அனைவரும் தமிழ்களே என்று மார்தட்டிக்கொள்ளும் அவரிடம் , தமிழ் நாட்டில் ஏன் quota ( விகிதாசார ,சாதி/சமயம் ) அடிப்படையில் வகுக்கப்படுகின்றன என்று கேட்டால் பதிலை காணம்.
4. இங்கிலாந்தின் கணிப்பீட்டின்படி Charity contribution இல்
முஸ்லிம்கள் இன் பங்கு £371
யூதர்களின் பங்கு £270
Protestant இன் பங்கு £202
கிறிஸ்தவர்களின் பங்கு £170
ஆனால் அவரைப் போல் " மதத்தைவிட மனித நேயமே பெரிது " என்று மதங்களுக்கெதிராக கூக்குரலிடும் நாத்திகனின் பங்கோ just £116.
மனிதநேயத்துக்காக வாதிடும் இவர்களின் "மனித நேயம்" பணம் என்று வரும்போது எங்கு பறந்தது என்று கேட்டால் அதற்கும் பதிலைக்காணம்.
அவர் எவ்வாறு கேள்விகளுக்கு பதிலளிக்காமல் இருப்பது " அது எனது தெரிவு சுதந்திரம்" என்று கூறுகிறாரோ , அதே " தெரிவு சுதந்திரம்" அடுத்தவருக்கும் உண்டு என்பதை உணர்ந்ததாக தெரியவில்லை.
கட்டுரையாளர் நிலவனுக்கு வக்காலத்து வாங்கும் வகையில்தான் எழுதியுள்ளார் இவர் நிலவனின் கரூத்துக்களை நன்கு உற்று நோக்கி இருந்தால் இக்கட்டுரையை எழுதி இருக்கமாட்டார் இவருடன் வேலை செய்யும் சக ஊழியர்களை திருப்திப்படுத்துவதர்க்காக எழுதியுள்ளார் என்பது மட்டுமே உண்மை (நான் கட்டுரையாளரிடம் கேட்கிறேன் நபிகள் (ஸல்) அவர்கள் செய்ததைதான் isis செய்கிறது என்ற நிலவனின் கருத்துக்களை நாம் ஜீரணிக்க வேண்டுமா? இஸ்லாம் கிழக்குக்கு வேறு மேற்குக்கு வேறு இல்லை என்ற உண்மையை புரிந்து கொள்ள வேண்டும்
ReplyDeleteஅன்புக்குரிய இஸ்லாமிய நண்பர்களே, ஒன்றை புரிந்து கொள்ளுங்கள், சவுதி யாருக்காவது மரணதண்டனை விதித்தால் எல்லா ஊடகங்களும் அது காட்டு மிராண்டிதனமானது, இஸ்லாம் காட்டுமிராண்டிதனமான சட்டங்களையே வகுத்துள்ளது என்று இஸ்லாத்துக்கு எதிரானவர்கலும், அவர்களை போன்ற ஊடகங்களும் கூச்சல் இடுகிறார்கள், இதே தண்டனையை இந்தியா அமுல் படுத்தினால் யாரும் அவ்வளவாக கண்டு கொள்வதில்லை, இதே போல் அமெரிக்காவும் இந்த சட்டத்தை அமுலில் வைத்துள்ளது ஆனால் அதற்கெதிராக யாரும் அவ்வளவாக அலட்டிகொள்வதில்லை,
ReplyDeleteSaudi இன் சட்டங்கள் தெரிந்திருந்தும் அங்கு சென்று அவர்களின் சட்டங்களை விமர்சிப்பது முட்டாள் தனம். இது மேற்கத்தேய நாடுகளில் வாழும் முஸ்லிம்களுக்கும் பொருந்தும். இந்த முஸ்லிம்களும் இப்படித்தான், வாழ்வது Benefit இல் ( அனைவருமல்ல) ஆனால் இது காபிர்களின் நாடு என்று குறை கூரிகொண்டிருப்பார்கள். காபிர்களின் நாடு இஸ்லாம் இல்லை என்றால், இஸ்லாம் முழு உலகத்துக்கும் அனுப்பப்பட்டது என்பது பொய்யாகிவிடும். இது காபிர்களின் நாடு என்று தெரிந்திருந்தும் ஏன் அங்கு போகிறீர்கள்? பின் அவர்களையே சாடுகிறீர்கள்.
சென்னையில் முஸ்லிம்களால் செய்த உதவிகளை மதவாதமாக்க வேண்டாம் என்று கூறும் நிலவன் மார்க்ஸ் , இங்கு யாரவது அவரை சாடினால், ''உங்களை போன்று பேச நான் ஒன்றும் மதவாதியல்ல'' என்று மதத்தை சாடுகிறார். அல்லது சவுதியில் ஏதாவது நடந்தால் ''அரபிகளை பற்றிதான் எல்லாருக்கும் தெரியுமே'' என எல்லா அரபிகளையும் காட்டுமிராண்டிகளாக சித்தரிக்க பார்க்கிறார்.
ஆனால் குற்றங்களின் எண்ணிக்கை அராபியாவை விடவும் இவர் வாழும் இந்தியாவில் தான் அதிகம், ஆனால் யாரும் இவரைப்போல் ''இந்தியர்கள் எல்லோரைப்பற்றியும் தெரியும் தானே'' என்று சொல்வதில்லை. இஸ்லாமியன் நல்லது செய்தால், அது மதவாதமல்ல ஆனால் இஸ்லாமியன் ஒருவன் கேட்டது செய்தால் அவனை மதிவதியாக வெஸ்டேர்ன் மீடியா போன்று இவர் சித்தரிக்கிறார்.
இது இவரின் Double Standard முகத்தையே சுட்டிக் காட்டுகிறது.
கட்டுரையாசிரியர் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும், இஸ்லாத்தை விளங்க வேண்டும் என்று வருபவர்கள் வேறு , விதண்டாவாதம் பண்ண வருபவர்கள் வேறு. நிலவன் மாக்ஸ் இன் பின்னூட்டங்களை நன்றாக அவதானித்து வந்திருப்பீர்களாயின், அவர் ஒன்றும் இஸ்லாத்தை பற்றி தெரியாதவர் அல்ல என்று உங்களுக்கு நன்றாக புரிந்திருக்கும். மேலும் அவருக்கு நன்றாக புரியும் படியாக பதில் அளித்த பலரும் பதில் அளித்த சந்தர்பங்களில் அவர் அதை தட்டிகலித்த சம்பவங்களையும் நீங்கள் அவதானித்திருக்கலாம். அதற்காக அவரை இழிவு படுத்துவது பிழைதான்.
கட்டுரையாளர்,கூட வேலை செய்யும் சக ஊழியர்களை திருப்திப்படுத்துவதற்காக காலத்தையும் நேரத்தையும் வீணடித்து கட்டுரையை எழுதியுள்ளார் என்பது தெளிவாக தெரிகிறது.எதோ அவர் மட்டும்தான் மாற்று மத சகோதரர்களுடன் வேலை செய்வதுபோல் சுட்டிக்காடியுள்ளார்.சகோதரரே நாங்களும் பலதரப்பட்ட நாட்டை சேர்ந்தவர்கள்,பலதரப்பட்ட இனத்தை செர்ந்தவேர்களுடந்தான் வேலை செய்கிறோம் அவர்களும் உள்ளத்தில் உள்ள மத விடயங்களை சர்வதேச ரீதியில் சமரசமாக பெசுகிரார்கல்தான் ஆனால் இந்த நிலவன் போன்று சம்மந்தமில்லாமல் ஒன்றோடு ஒன்றை மூட்டிவிடும் கருத்துக்களை பாவிப்பதாக காண முடியாது.
ReplyDeleteநிலவன் முஸ்லிம் எதிர்ப்பாளர்களின் ஒரு எஜன்ட் பொதுவாக இப்போது முஸ்லிம்களை குறைகூருவதர்க்கும் அவர்கள் மேல் பழியைப்போட்டு விடும் தந்திர உபாயங்களை செய்யும் வேலைகளுக்கு சம்பளத்துக்கு ஆட்கள் நியமிக்கப்பட்டு நன்கு பயிற்ரப்பட்டு இவர்களுக்கு இது ஒரு தொழிலாக செயல்படும் அளவுக்கு அமர்த்தப்பட்டுள்ளார்கள்.அவ்வாரனவர்களில் ஒருவன்தான் இந்த நிலவன் என்பதை பின்னூட்டத்தில் உள்ளவர்கள் நன்கு அறிந்து பதிவிடுவதை கையாள வேண்டுமே தவிர தகுந்த உறைப்பான பதில் கொடுக்கும் சகோதரர்களை குறை கூறுவதை நிறுத்த வேண்டும்.
அன்பின் சகோதரர்களே! முஸ்லிம்களுக்கு என்று ஒரு முன்மாதிரி உள்ளது. நீங்கள் அழகிய முறையில் விளக்குங்கள். அவரின் உள்ளத்தை நாங்கள் பார்கவில்லை. அவர் அவரின் அறிவுக்கு சரி என்று பட்டதை சொல்லுகிறார். நாம் அல்லாஹ்வை ஈமான் கொண்டுள்ளோம். அவனின் போதனைகளை அழகிய முறையில் விளக்குவோம். அதற்கு நாங்களே சாட்சியாகவும் இருப்போம்.
ReplyDeleteவீண் வேலை செய்யாமல், திருந்த வழியைப் பாருங்கள். கட்டுரையாசிரியர் சொல்வது சரி. புரிய மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தால் ஒன்றும் செய்ய முடியாது. அல்லாஹ் போதுமானவன்.
ReplyDeleteமுஸ்தபா ஜவ்பர் அவர்களே, அநாகரீகமாக நீங்கள் கருத்து பதிவது வழக்கமாகி விட்டது. நியாயமான கருத்தை முன்வைத்த என்னைக்கூட வக்காளத்து வாங்குவதாக குற்றம் சாட்டியிருப்பதை பார்த்து கவலைப் படுகின்றேன். கிணற்றுத் தவளை போன்று சிந்திக்காமல், ஒரு இணையத்தின் வீச்சு, அடைவு குறித்து அறிந்துகொண்டு, அதற்கு ஏற்றவிதமாக நிலவனுக்கு பதிலளிக்க முயற்சி செய்யுங்கள்.
ReplyDeleteநிலவனின் கேள்விகள் நியாயமாக இருக்கின்றதா என்பதற்கு அவர் வேறு ஒரு இணையதளத்தில் இட்ட இந்த கருத்துக்களை உங்கள் முன் பதிவேற்றம் செய்கிறேன். நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள் இவர் இஸ்லாத்தை பற்றி விளங்கிக்கொள்ள கேள்வி கேட்கிறாரா அல்லது இஸ்லாத்தை இழிவு படுத்த கேள்வி கேட்கிறாரா என்று ( ஆனால் இவரது எந்த பின்னூட்டங்களிலும் கிறிஸ்தவ மதத்தை பற்றியோ அதை சாடுவதையோ நான் பார்த்ததில்லை.)
ReplyDeleteநிலவன் மார்க்ஸ் says:
September 29, 2015 at 5:46 pm
அல்லாஹ்வின் குர்ஆனில் கிலாகித்துச் சொல்லபப்டும் மக்கா என்கின்ற (எனக்கு அது புனித நகர் அல்ல) நகரின் பாதுகாப்பு மனிதனின் கைகளில் விடப்பட்ட ஒன்று என்றால், ஜித்தாவின் பாதுகாப்பும், துபாய், லண்டனின் பாதுகாப்பும் ஷைத்தானின் கைகளிலேயா விடப்பட்டுள்ளது? அல்லாஹ்வின் பெயரால் முஹம்மது சொன்ன பொய்யை நியாயப்படுத்த செய்யப்படும் சப்பைக் கட்டல்லவா இது?
அரேபியருக்கு வருமானத்தை ஈட்டிக் கொடுக்கும், கறுப்புக் கட்டிடத்தை சுற்றி உள்ளாடை இல்லாமல் ஓடும் மடத்தனத்தை, தூண்களுக்கு கல்லெறியும் மூட நம்பிக்கையை இஸ்லாமியர் விட்டொழிக்க வேண்டும்.(உள்ளாடை போடாமல் இருப்பது மூடநம்பிக்கையா? மேற்குலக நாடுகளில் பல பெண்களே உள்ளாடை போடுவதில்லை-Lol )
( this represent that everyone is equal in front go Allah, king or the poor no difference)
இதை விட மோசமான விதத்தில் எழுதி உள்ளார்.அதை நான் இங்கு பதிந்து அவர் எதிர்பார்க்கும் அந்த பப்ளிசிடியை அளிக்க நான் விரும்பவில்லை. இதில் வியப்பு யாதெனில் தலையங்கத்தின் கீழ் ''இதை யார் மனதையும் புண்படுத்த எழுதவில்லை, சிந்தனைக்காக மட்டுமே'' என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இவர் ஒரு நாத்திகர் என்றால் இவரிடம் கூற ஒன்றுதான் உள்ளது.
இவர் நினைக்கும் படி கடவுள் இல்லையென்றால், நாங்கள் கடவுளை பின்பற்றியதட்காக எங்களை தண்டிக்க யாரும் இருக்கமாட்டார்கள்.
ஆனால் கடவுள் என்று ஒருவன் இருப்பானேயானால், நாங்கள் ஒருவிதத்தில் தப்பி. கடவுள் இல்லை என்று கூறிக்கொண்டு இருந்தவனின் நிலைதான் பரிதாபமாகிவிடும்.
ஆனால் அல்லாஹ் ஒவ்வொரு மனிதனுக்கும் எதோ ஒரு தருணத்தில் எது உண்மையான மார்க்கம் என்பதை, உணர்துவானாம், அனால் அவனோ தனது இச்சையினாலும், வேறு உலக காரனுங்களுக்காகவும் ஏற்றுகொள்ள மறுப்பனாம். ( Prophets uncle's story enlighten this to us)
I fully agree with "voice srilanka". You done good job alla blessing up on you.
ReplyDelete@Ameer umad , Hassan and bro Aafee இதைவிடவும் அழகாக என்னால் நிலவனிடம் கேளவி கேட்க முடியாது ,
ReplyDeleteசரி நீங்களே அவரிடம் கேள்விகளை நீங்கள் கூறும் அழகான முறையில் கேட்டுப்பாருங்களேன், பதில் கிடைக்குமா என்று பார்ப்போம்.
உங்கள் அனைவறையும் விட நான் Jaffna Muslim இல் Nilavan and Jesslya போன்றவர்களின் கருத்துக்களை தடைசெய்ய வேண்டாம் என்று ஆரம்பத்தில் இருந்தே கூறிவருகிறேன். இப்பொழுதும் அதையே தான் கூறுகின்றேன்.
அவர் இங்கே கேள்வி கேட்டால் இங்குதான் பதிலை எதிர்பார்க்க வேண்டும். அவ்வாறே அவரிடம் கேள்வி கேட்டால் அவர் இங்குதான் பதில் கூறவேண்டும். அவரின் blog ஐ விஸ்தரிப்பதற்காக அங்கு அழைப்பது சிறு பிள்ளைத்தனமானது.
( after searching thoroughly about him only I am saying this , and I take the whole responsiblity- you should have understood when I started to call him Pastor Nilavan Marx) .
In sha Allah I will stop posting about this matter in this heading. I think I have given enough proofs to for you all to know that he is not here to understand Islam as he claims in his blog and every where he comments)
மிகவும் ஆச்சரியமான விடயம், ஜப்னா முஸ்லிம் நான் பதிந்த எந்தக் கருத்தையுமே பிரசுரிக்கவில்லை. இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் அச்சுறுத்தல் காரணமாக இருக்கலாம் என்றே யூகிக்க வேண்டியுள்ளது. ஏனெனில் எனது கருத்துக்கள் எதுவுமே பிரசுரமாகாத நிலையில், என்னை குறிவைத்து தாக்கும் இஸ்லாமிய அடிப்படைவாத பதிவாளர்களின் கருத்துக்கள் தாராளமாக பெரிய பெரிய பந்திகளாக அனுமதிக்கப் பட்டுள்ளன.
ReplyDeleteமுஸ்லிம் நண்பர்களே இஸ்லாத்தைக் கொச்சைப்படுத்துபவர்களுக்கு வக்காலத்து வாங்க வேண்டாம் எமது சமுக நண்பர்கள் சரியாகவே செய்வதாக உணர்கிறேன் நீங்கள் அந்த குறிப்பிட்ட நபரின் அனைத்து பதிவூகளையூம் வாசித்து பின்னர் எழுதுங்கள் முஸ்லிம்களையூம் இஸ்லாத்தையூம் அல்லாhவின் தூதரையூம் கொச்சைப்படுத்துவதும் அதற்கு பதில் கொடுத்தால் அது பதில் அல்ல என்பதும் உங்களுக்கு வேண்டுமானால் (சரியாக வாசிக்காததால்) விளங்காமல் இருக்கலாம் அல்லாhவின் துணையால் எங்களுக்கு விளங்குகின்றது நான் Voice Srilanka வின் புதிய அணுகலை பாராட்டுகிறேன் அல்லாh உங்களுக்கு மேலும் தௌpவையூம் அறிவையூம் வழங்குவானாக எங்களுக்கும் வேலை செய்யூம் இடத்தில் நல்ல பெயர் பெற எழுத முடியூம் ஆனால் அதை நாங்கள் செய்வதில்லை காரணம் அதை செய்வதால் கிடைக்கும் நல்ல பெயரை விட நாங்கள் இஸ்லாத்தில் உள்ள விடயங்களை சரியாக எடுத்துக் காட்டுவதையே விரும்புகிறொம் தயவூ செய்து சமுகத்தை உங்கள் சுயநலத்திற்காக காட்டிக் கொடு;காதீர்கள் காட்டிக் கொடுத்தது போதும்
ReplyDeleteஒருவரின் கருத்து பதிவாகவில்லை என்றால் அது புறக்கணிக்கத்தக்கது அல்லது தரமற்றது என்றும் பொருள்படும் மேலும் சொல்கிறேன் முஸ்லிம்களே குறிப்பிட்ட சில நபர்கள் தொடர்பாக மேலே voice sri lanka குறிப்பி;ட இருவரை விட மேலும் சில நபர்கள் தொடர்பாகவூம் எனக்கு சில சந்தேகம் உள்ளது தருணம் வரும் போது இன்ஸா அல்லாh பதிவிடுகிறேன்
ReplyDelete