Header Ads



உலகம் முழுவதுமுள்ள முஸ்லிம்களுக்கு, நாம் ஆதரவு தர வேண்டும் - கூகுள்

முஸ்லிம்கள், சிறுபான்மையினருக்குத் தனது ஆதரவைத் தெரிவித்து கருத்து வெளியிட்டிருக்கிறார் கூகுள் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை.

சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:

அச்ச உணர்வு நமது மதிப்பீடுகளைத் தோற்கடிக்க அனுமதிக்கக் கூடாது. அமெரிக்கா மட்டுமல்லாமல், உலகம் முழுவதுமுள்ள முஸ்லிம்கள், பிற சிறுபான்மையினருக்கு நாம் ஆதரவு தர வேண்டும்.

பல்வேறு பின்னணி, கருத்துகள், அனுபவங்களால்தான் அனைவருக்கும் பயன்படும் சிறந்த செயல்கள், முடிவுகள் கிடைக்கும். அனைவருக்கும் தங்களின் கருத்துகளை வெளியிடும் உரிமை உண்டு. ஆனால், சிலர் வெளிப்படும் கருத்து அனைவருடைய கருத்தாக ஆகிவிடாது என்று சுந்தர் பிச்சை குறிப்பிட்டார். 

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட ஆர்வம் தெரிவித்துள்ள டொனால்டு டிரம்ப், அந்நாட்டில் முஸ்லிம்கள் நுழைவதற்குத் தடை விதிக்க வேண்டும் எனவும், அந்த நாட்டிலுள்ள முஸ்லிம்களைக் கண்காணிக்க வேண்டும் எனவும் கருத்து வெளியிட்டிருந்தார். இது அந்த நாட்டில் மட்டுமல்லாமல், உலகெங்கும் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. அதைத் தொடர்ந்து சுந்தர் பிச்சை இவ்வாறு தெரிவித்தார்.

3 comments:

  1. பிழையான தலைப்பு , சுந்தர் பிச்சை கூறியது , கருத்து சுதந்திரத்தின் முக்கியத்துவத்தையும் உலகம் பூர உள்ள சிறுபான்மையினருக்கு உதாரணம் ஷியாக்கள் முஸ்லிம்கள் ஆதரவு வழங்க வேண்டும் யென்று

    ReplyDelete
  2. Google CEO was born and raised in chennai. He knows what Muslims doing in chennai right now.

    ReplyDelete
  3. Youtube is a devil. No one can say that it depends on the person it is used.

    ReplyDelete

Powered by Blogger.