Header Ads



காத்தான்குடியில் இரத்ததானம் வழங்க, முன்வருமாறு அழைப்பு

அன்புப் பொதுமக்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும்.
இரத்ததானம் வழங்கள்

 இரத்ததானம் வழங்கும் நிகழ்வொன்று எதிர்வரும் 03.01.2016 அதாவது வருகின்ற ஞாயிற்றுக் கிழமை காலை 8.00 மணி தொடக்கம் மதியம் 1.00 மணிவரை காத்தான்குடி மெத்தைபள்ளி வித்தியாலயத்தில்; நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது.

எனவே மேற்படி நிகழ்வில் இரத்ததானம் வழங்க விரும்பும் சகோதர சகோதரிகள் குறிப்பிட்ட கால நேரத்திற்குள் எமது இரத்ததான முகாமுக்கு வருகை தருமாறு அன்பாய்க் கேட்டுக்கொள்கின்றோம்.

•    எவரொருவர் ஓர் உயிரை வாழவைக்கிராறோஇ அவர் மனிதர்கள் அனைவரையும் வாழ வைத்தவராவார்'. (அல் குர்ஆன்)

•    'எவர் ஒருவர் இவ்வுலகில் ஒரு நம்பிக்கையாளரது துன்பத்தினை தீர்த்துவைப்பாரோஇ இறுதிநாளில் அவருக்கு ஏற்படும் மிகப் பெரிய துன்பத்தினை அல்லாஹ் தீர்த்துவைப்பான்இ மேலும் அவர் துன்பப்பட்டவருக்கு உதவி செய்துகொண்டிருக்கும் காலமெல்லாம் அவருக்கு அல்லாஹ் உதவி செய்து கொண்டிருப்பான்'.(ஹதீஸ்)

எனவே  இஸ்லாத்தின் பார்வையில்  ஒரு சமூகத்திற்கு இரத்தம் தேவைப்படும் போது இரத்ததானம் செய்வது தனிப்பட்ட ரீதியிலும் சமூக அளவிலும் ஒரு கட்டாய கடமையாக அமைகிறது.

குறிப்பு :
•    வரும்பொழுது தங்களது தேசிய அடையால அட்டையை தவறாமல் காொண்டுவரவும்.
•    பெண்களுக்கான பிரத்தியோக ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளான

நன்றி
இப்படிக்கு
தலைவர் ஃ செயலாளர்
சமுக நலன் பேணும் அமைப்பு காத்தான்குடி

1 comment:

  1. காத்தான்குடி மக்கள் அதிகமான இரத்த தானம் செய்து வருகின்ற போதிலும் காத்தான்குடி வைத்திய சாலை மூலம் மக்கள் இன்னமும் திருப்தியான சேவையை பெற்றுக்கொள்ள முடியவில்லை .

    ReplyDelete

Powered by Blogger.