Header Ads



கண்டி மீரா மக்காம், பள்­ளி­வாசல் மீது தாக்­கு­தல்


-ARA.Fareel- கண்டி நகரில் அமைந்­துள்ள மீரா மக்காம் பள்­ளி­வாசல் சனிக்­கி­ழமை இரவு இனந்­தெ­ரி­யா­தோ­ரினால் கல்­வீச்சுத் தாக்­கு­த­லுக்கு உள்­ளா­கி­யுள்­ளது. தாக்­குதல் கார­ண­மாக பள்­ளி­வாசல் கூரைத் தக­டுகள் சேத­ம­டைந்­துள்­ள­தாக கண்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.

முஸ்லிம் சமய விவ­கார மற்றும் தபால் அமைச்சர் தாக்­குதல் சம்­பவம் தொடர்­பாக விரி­வான விசா­ர­ணை­களை நடத்தி குற்­ற­வா­ளி­களை சட்­டத்தின் முன் நிறுத்­தும்­படி  பொலி­ஸா­ரிடம் கோரிக்கை விடுத்­துள்ளார்.

பள்­ளி­வா­சல்கள் மீது கல்­லெ­றிந்து உடை­மை­க­ளுக்கு சேதம்­வி­ளை­வித்து இன மோதல்கள் உரு­வாக்க முயற்­சிப்­ப­வர்­க­ளுக்கு இட­ம­ளிக்க வேண்­டா­மெ­னவும் பொலி­ஸாரை வேண்­டி­யுள்ளார்.

சனிக்­கி­ழமை இரவு 10 மணி­ய­ளவில் தாக்­குதல் சம்­பவம் இடம்­பெற்ற வேளை பள்­ளி­வா­ச­லினுள் ஜமாஅத் குழு­வினர் தங்­கி­யி­ருந்­துள்­ள­துடன் கல்­வீச்­சுக்குப் பயந்து அவர்கள் சப்­த­மிட்­டுள்­ளனர் என்­றாலும் பயத்­தினால் அவர்கள் பள்­ளி­வா­சலை விட்டு வெளியே வர­வில்லை.

நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை காலை­யி­லேயே பள்­ளி­வாசல் நிர்­வா­கத்­தினால் சம்­ப­வம்­தொ­டர்­பாக பொலிஸில் முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.

மீரா மக்காம் பள்­ளி­வாசல் இனந்­தெ­ரி­யா­தோ­ரினால் தாக்­கப்­பட்­டுள்­ளமை இவ்­வ­ரு­டத்தில் இது இரண்­டா­வது தட­வை­யாகும். கடந்த பொதுத் தேர்தல் காலத்தின் போதும் பள்­ளி­வாசல் கல்­வீச்­சுக்கு உள்­ளாகி 5 கூரைத் தக­டுகள் சேதப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. இந்த வரு­டத்தில் பள்­ளி­வாசல் மீதான இரண்­டா­வது தாக்­குதல் இது­வாகும்.

சம்­பவம் தொடர்பில் மீரா மக்காம் பள்­ளி­வாசல் நிர்­வாக சபைத் தலைவர் சட்­டத்­த­ரணி எம்.ஏ.சி.எம். யாக்­கூபை ‘Vi' தொடர்பு கொண்டு வின­வி­ய­போது அவர் பின்­வ­ரு­மாறு விளக்­க­ம­ளித்தார்.

சம்­பவம் தொடர்பில் கண்டி பொலிஸில்  முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது. பொலிஸார் சம்­ப­வத்தைப் பெரி­து­ப­டுத்த வேண்டாம் எனவும் கல் வீச்­சினால் ஏற்­பட்ட சேதத்­துக்கு நஷ்­ட­ஈடு தரு­வ­தா­கவும் கூறு­கி­றார்கள்.

பொதுத் தேர்தல் காலத்தின் போது இடம்­பெற்ற கல்­வீச்சின் போதும் சேத விப­ரங்­களைப் பார்­வை­யிட்டு விட்டு நஷ்­ட­ஈடு தரு­வ­தாகக் கூறி­னார்கள். ஆனால் இது­வரை தர­வில்லை. இவ்­வாறு அடிக்­கடி பள்­ளி­வாசல் தாக்­கப்­ப­டு­வதன் பின்­னணி என்ன வென்று தெரி­ய­வில்லை. இது திட்­ட­மி­டப்­பட்ட செயலா என்றும் சந்­தே­கிக்க வேண்­டி­யுள்­ளது.

இவ்­வா­றான சம்­ப­வங்­க­ளுக்கு பொலிஸார் நஷ்­ட­ஈடு தரு­வ­தாக ஏன் கூறு­கி­றார்கள் என்றும் தெரியவில்லை. பொலிஸார் சந்தேக நபர்களைக் கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும் என்றார்.

No comments

Powered by Blogger.