Header Ads



தேசியப் பட்டியலை பெற வேண்டுமெனில், அதற்கான பிள்ளையார் சுழியை நான் போட்டுத்தருகிறேன் - அமீர் அலி

(அபூ செய்னப்)

தூய்மையான அரசியலுக்கும் சமூக சேவைக்கும் பெண்கள் பிரதிநிதியாக முன்பள்ளி ஆசிரியர்களே பொறுத்தமானவர்கள், அவர்கள் இந்த சின்னஞ்சிறிய பிள்ளைகளை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர மிகுந்த பிரயத்தனம் எடுக்கின்றார்கள் காணாக்குறைக்கு அந்த பிள்ளைகளின் பெற்றோர்களிடம் ஏச்சுக்களையும் வாங்கிக்கட்டிக்கொள்கிறார்கள், பொறுமையாக செயற்பட்டு இந்த சிறார்களை கவனிக்கின்றார்கள்  என கிராமிய பொருளாதார அலுவல்களுக்கான பிரதி அமைச்சர் அமீர் அலி கூறினார், 

"கிட்சி கின்டர் கார்டன்" முன்பள்ளி இன் முதலாவது ஆண்டு நிறைவை ஒட்டி நடாத்தப்பட்ட பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரை நிகழ்த்தும் போதே பிரதி அமைச்சர் அமீர் அலி அவர்கள் மேற்கண்டவாறு கருத்துத்தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

முன்பள்ளி ஆசிரியைகள் பொறுமையாக செயற்பட்டால் மட்டுமே இந்த மாணவர்கள் தமக்கான அடைவு மட்டத்தை அடைய முடியும், உண்மையில் அவர்களின் பொறுமையும் விட்டுக்கொடுப்பும் சமூக சேவை எண்ணமும் என்னை மிகவும் கவர்ந்த விடயமாகும். எனவே தற்போதைய அரசியலில் பெண்களுக்கான ஒதுக்கீடு இருபத்தைந்து வீதம் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் இந்த முன்பள்ளி ஆசிரியைகள் எதிர்வரும் பிரதேச சபை தேர்தலுக்கு தகுதியானவர்களாக நான் கருதுகிறேன், அவர்கள் சமூகத்தில் உள்ள எல்லாத்தரப்பினரையும் நன்கு அறிந்து வைத்திருக்கின்றார்கள் அதுமட்டுமல்லாமல் அவர்களுடன் மிக நெருக்கமான இடைத்தொடர்பை கொண்டுள்ளார்கள் எனவே தான் பிரதேசத்தின் அபிவிருத்தியை நோக்காகக் கொண்ட இந்த பிரதேச சபை தேர்தலில் முன்பள்ளி ஆசிரியைகளை பொறுத்தமானவர்கள் என்பது எனது கருத்தாகும்.

நமது இந்தப்பிரதேசத்தில் பாடசாலை மாணவர்களையும்,சிறுவர்களையும் வழிகெடுக்கும் வகையில் போதை தரக்கூடிய ஒருவகை மாத்திரை விற்கப்படுவதாகவும், அதிலே இந்தப்பிரதேசத்தில் அமைந்திருக்கும் ஒரு பாமசியிலயே மேற்படி மாத்திரை விற்பனை செய்யப்படுவதாகவும் இதன் மூலம் குறிப்பிட்ட பாமசி நாளொன்றுக்கு சுமார் முப்பது ஆயிரம் ரூபாய்க்கு மேற்பட்ட பணத்தினை இலாபமாகப் பெருவதாகவும் எனக்கு அறியக்கிடைத்ததுள்ளது, இது மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடுகின்ற செயற்பாடாகும். அவர்களின் நல்வாழ்வு பற்றி பெற்றோரும்,ஆசிரியர்களும் பல நூறு கனவுகளை சுமந்து செயற்படும் போது இவ்வாறான சமூக விரோதச் செயல்களில் மாணவர்களின் கவனத்தை திசை திருப்ப முனைவதானது ஒரு அடிமட்ட செயலாகவே கருத முடியும், இவ்வாறான சமூகத்தை சீர்கெடுக்கும் விடயங்களை தொடர்ந்தும் அங்கீகரிக்க முடியாது எனவே மாணவர்களை கெடுக்கும் இந்தச் செயற்பாட்டில் ஈடுபடுகின்றவர்கள் தம்மை திருத்திக் கொள்ள வேண்டும் இல்லை என்றால் அவர்கள் அதற்கான பிரதிபலனை அவர்கள் விரைவில் அனுபவிப்பார்கள் என்பதனை மிகுந்த அடக்கத்தோடு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன் அத்தோடு பெற்றோர்களும் இது தொடர்பில் மிகுந்த கரிசனையோடும், தமது பிள்ளைகள் பற்றிய விளிப்புணர்வுடனும் இருக்கவேண்டும்.

எல்லாவிதமான அபிவிருத்திற்கும் அரசியல் இன்றியமையாத ஒன்றாக காணப்படுகின்றது ஆனால் நமது பிரதேசத்திலுள்ள மக்கள் யாரை,எதற்காய் அரசியலில் தெரிவு செய்ய வேண்டும் என்ற அரசியல் ஞானத்தை இழந்தே காணப்படுகிறார்கள் இந்த பொறுப்பற்ற செயற்பாட்டினால்  நமது பிரதேசத்திற்கான பிரதிநிதித்துவம் இன்று தப்பிப்பிழைத்துள்ளது, மீண்டும் எதிர்காலத்தில் இவ்வாறான பிற்போக்கான செயல்பாட்டில் இருந்து விடுபட வேண்டும், கடந்த காலங்களில் நமது பிரதிநிதித்துவத்தை தோற்கடிக்க பல சதி முயற்சிகள் நடைபெற்றன ஆனால் இறைவன் பெரியவன் அதனை காப்பாற்றித்தந்தான், இன்று சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன் தேசியப்பட்டியல் விடயம் சூடுபிடித்துள்ளது அந்த தேசியப்பட்டியலை கல்குடாவுக்கு பெற வேண்டுமெனில் அதற்கான பிள்ளையார் சுழியை நான் போட்டுத்தருகிறேன், அதனை எவ்வாறு பெறவேண்டும் என்ற ஆலோசனையை வழங்க தயாராகவே உள்ளேன். என அவர் மேலும் கூறினார்.

2 comments:

  1. மேற்கொன்டு எல்லாம் நல்லாவே பேசிவிட்டு கடைசியில் பிள்ளயார் ஞாபகம் எதற்கு?நல்லா சுழிபோடத்தெரியுமோ...........

    ReplyDelete
  2. May be he is the real pillayar

    ReplyDelete

Powered by Blogger.