பாகிஸ்தானில் நரேந்திர மோடிக்கு இரட்டை கொண்டாட்டம், காலிலும் வீழ்ந்தார்
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் தன்னை வரவேற்ற விதம் தனிப்பட்ட முறையில் மிகவும் நெகிழச்செய்தது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இன்று காலை ஆப்கானிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, வரும் வழியில் திடீரென பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். பாகிஸ்தான் சென்ற பிரதமர் மோடியை லாகூர் விமான நிலையத்திற்கு நேரில் வந்து கட்டித்தழுவி வரவேற்ற நவாஸ் ஷெரிப், தனது இல்லத்திற்கு அழைத்துச்சென்றார். சுமார் ஒரு மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பின் போது, மோடிக்கு நவாஸ் ஷெரீப் விருந்து அளித்தார்.
சந்திப்பு முடிந்ததும், இந்தியா புறப்பட்ட மோடியை, லாகூர் விமானம் நிலையம் வரை வந்து வழியனுப்பி வைத்தார். இந்தியா வந்த பிரதமர் மோடி தனது பாகிஸ்தான் பயணம் பற்றி டுவிட்டர் மூலம் கருத்து தெரிவித்துள்ளார். தனது டுவிட்டரில் பிரதமர் மோடி கூறியுள்ளதாவது:-
“ லாகூர் விமான நிலையத்திற்கு வந்து என்னை வரவேற்றுவிட்டு, நான் திரும்பும் போதும் என்னை விமான நிலையம் வரை வந்து வழியனுப்பி வைத்த நவாஸ் ஷெரீப் செய்கை என்னை தனிப்பட்ட முறையில் நெகிழச்செய்தது” என்றார்.
மோடி வெளியிட்டுள்ள மற்றொரு டுவிட்டில் “நவாஸ் ஷெரீப், வாஜ்பாயுடனான தனது உரையாடல்களை நினைவு கூர்ந்தது மட்டுமல்லாமல், தனது பிறந்த நாள் வாழ்த்தை வாஜ்பாயிடம் பகிர்ந்து கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார். நவாஸ் ஷெரீப் பிறந்த நாள் மற்றும் அவரது பேத்தி திருமணம் இரட்டை கொண்டாட்டத்தை அளித்தது” என்று தெரிவித்துள்ளார்.
2
லாகூரின் புறநகர் பகுதியில் உள்ள பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் ரைவிண்ட் மாளிகையில் நேற்று அவரை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். அப்போது அவருக்கு நவாஸ் ஷெரீப் விருந்து அளித்தார். சைவ உணவு வகைகள் பரிமாறப்பட்டன.
அவர்கள் பேசிக் கொண்டிருந்த மண்டபத்துக்குள் நவாஸ் ஷெரீப்பின் குடும்பத்தினர் வந்தனர். நவாஸ் ஷெரீப்பின் தாயாரும் வந்தார். உடனே மோடி அவர் அருகில் சென்று குனிந்து அவரது காலை தொட்டு வணங்கி ஆசி பெற்றதாக அந்த மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.
பிரதமர் மோடியுடன் பாகிஸ்தான் சென்ற குழுவினரில் கணிசமான பேர்தான் அவருடன் நவாஸ் ஷெரீப்பின் மாளிகைக்கு சென்றதாகவும், நூற்றுக்கும் மேற்பட்ட அதிகாரிகள் விமான நிலையத்தில் தங்க வைக்கப்பட்டு, அங்கு அவர்களுக்கு சிற்றுண்டி வழங்கப்பட்டதாகவும் அந்த வட்டாரங்கள் கூறின.
Post a Comment