நிஸார் மாஸ்டர் வபாத்தானார்
அக்குரனையை பிறப்பிடமாகக் கொண்ட மர்ஹூம் Z.M நிஸார் மாஸ்டர் (Nepolian Rice Mill) அவர்கள் கடந்த வியாழனன்று (24) இறையடி எய்த செய்தி அறிந்து இக்ரஃ இஸ்லாமிய சங்கம் ஆழ்ந்த கவலையடைகிறது.
மர்ஹூம் நிஸார் மாஸ்டர் அவர்கள் குவைத் நாட்டில் தொழில் நிமித்தம் தங்கியிருந்த காலப்பிரிவில் இக்ரஃ இஸ்லாமிய சங்கத்தின் அங்கத்தவராகவும் அதன் நிர்வாக சபை உருப்பினாராகவும் பின்பு ஆலோசகராகவும் இருந்து பல்வேறு சம்மோக , சன்மார்க்க பணிகளை செய்து வந்தார்.
சமூக சேவையில் அதீத ஈடுபாடு கொண்ட நிஸார் மாஸ்டர் அவர்கள் இக்ரஃ இஸ்லாமிய சங்கத்துடன் மட்டுமல்லாது இலங்கையின் பல பிரதேசங்களை மையப்படுத்தி இயங்கும் சமூக சேவை அமைப்புக்களோடும் நெருக்கமான உறவை ஏற்படுத்திக் கொண்டதோடு அவர்களுக்குத் தேவையான வழிகாட்டல்கள்,ஆலோசனைகள் மற்றும் ஊக்குவிப்புக்களையும் வழங்கி வந்தார்.
குவைத் நாட்டில் தனது பணிகளை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய பின்னரும் சங்கத்துடன் நெருக்கமான உறவை பேணி வந்தது மட்டுமன்றி சமூக சேவை அமைப்புக்களோடும் , இஸ்லாமிய அமைப்புக்களோடும் இணைந்து தனது இறுதி மூச்சு வரை உழைத்து வந்தார்.
அவரது அர்ப்பணிப்பும், எளிமையான வாழ்வு முறையும் இஸ்லாமிய பாதையில் உழைக்கும் ஒவ்வொருவருக்கும் சிறந்த முன்மாதிரியாகும்.
வல்ல அல்லாஹ் வரத்து பாவங்களை மன்னித்து , அவரது கப்ரை விசாலமாக்கி, சுவனப் பாக்கியத்தை வழங்குமாறு இக்ரஃ இஸ்லாமிய சங்கம் பிரார்த்திக்கிறது.
அத்துடன் பிரிவுத் துயரில் வாடும் அவரது குடும்பத்தினருக்கு இக்ரஃ இஸ்லாமிய சங்கம் தனது அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதோடு அழகிய பொறுமையை தந்தருளுமாறு வல்ல அல்லாஹ்வை பிரார்த்திக்கிறது
இக்ரஃ இஸ்லாமிய சங்கம்-குவைத்
inna lillahi wahinna ilahi rajioon
ReplyDelete