Header Ads



என் பெற்றோர் யூதக் குடும்பத்தினரே, முஸ்லிம்களுக்கு பேஸ்புக் ஆதரவளிக்கும் - மார்க் சுக்கர்பெர்க்

” சமீபத்தில் நடைபெற்ற பாரீஸ் தாக்குதலை தொடர்ந்து அமெரிக்காவில் பல தலைவர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக பேசி வருவது இங்கு உள்ள முஸ்லிம்களுக்கு ஒரு பாதுகாப்பற்ற உணர்வை தோற்றுவித்திருக்கிறது. அவர்கள் எங்கே தாங்கள் அச்சுருத்தப்படுகிறோமோ என்று என்னும் நிலையை உருவாக்கியிருக்கிருப்பதை என்னால் உணர முடிகிறது.

ஒரு நல்ல யூதக் குடும்பத்தவராக, என்னுடைய பெற்றோர் எனக்கு போதித்தது நாம் எந்த ஒரு சமூகத்திற்கெதிராக அநீதி நடைபெறும் போதும் எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும் என்பதுதான், இப்பொழுது நாம் பாதுகாப்பாக இருப்பதாக பட்டாலும் ஒரு கட்டத்தில் ஒரு பிரிவினரை தாக்கும் சுதந்திரம் பெற்றவர்கள் எந்த நேரத்திலும் மற்றவர்களையும் தாக்குவார்கள் .

ஃபேஸ்புக் நிறுவனத்தின் அதிபராக நான் சொல்லிக்கொள்வது , நீங்கள் ஒரு முஸ்லிமாக இருந்தால் உங்களுக்கு ஃபேஸ்புக் எப்பொழுதும் ஆதரவளிக்கும், அச்சமும் பயமுமற்ற ஒரு சமாதானமான சூழ்நிலையை உருவாக்குவதில் நாங்கள் என்றும் உறுதுணையாக இருப்போம்.

சமீபத்தில் எங்களுக்கு பிறந்திருக்கும் குழந்தை எங்களுக்கு நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் அதிகப்படுத்தியிருக்கிறது. ஒருவர் நம்மீது காட்டும் வெறுப்பு நம்மையும் வெறுப்பு மனோ நிலைக்கு தள்ளிவிடும் வாய்ப்பிருக்கிறது. ஆனாலும் நாம் நம்பிக்கையிழக்கத் தேவையில்லை. நாம் ஒன்று பட்டு கைகோர்த்து ஒருவருக்கொருவர் பரஸ்பரம் உதவிக்கொள்ளும் போது நம்மால் நிச்சயமாக ஒரு புதிய உலகை படைக்க முடியும்."

இவ்வாறு அவர் தெரிவித்தார். அவருடைய இந்த அறிவிப்பு பலதரப்பட்ட மக்களாலும் பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது.



5 comments:

  1. Facebook is a place where shaithaan occupies. It is suitable for jews, not for Musalman.

    ReplyDelete
  2. Nizar an unusual statement from you. But I whole heartedly agrees to it. Facebook is a Fitnabook where gossip and zina ( unwanted pics ) takes the centre stage.

    ReplyDelete
  3. ஹலோ "நிசார்" எனும் முஸ்லிம் பெயரில் ஒளிந்து கொண்டு முஸ்லிம்களுக்கு புத்தி சொல்லுவதாய் முட்டாள்தனமாக கருத்துக்கள் கூறும் முஸ்லிம் விரோதியே,

    முதலில் நாங்கள் "முசல்மான்"கள் அல்ல, உன்னதமான மார்க்கமான இஸ்லாத்தை பின்பற்றும் "முஸ்லிம்கள்" என்பதை புரிந்துகொள்!

    எங்களுக்கு அட்வைஸ் பண்ண உனக்கோ உன்போன்ற நரிகளுக்கோ எவ்வித தேவையுமில்லை, தகுதியுமில்லை! நாங்கள் பரிபூரணமான மார்க்கத்தோடு உள்ளோம்.. நாங்கள் அதை சிலநேரம் கவனயீனமாக
    அதன்பக்கம் இல்லாமல் வெளியாகும்போதே தவறு செய்கிறோம். மீண்டுவிட்டால் திருந்திவிடுகிறோம். அல்லாஹ் எங்களுக்கு நேர்வழிகாட்ட போதுமானவன்!

    பேஸ்புக் ஒருவகையில் தீயதென்றாலும் மறுவகையில் முஸ்லிம்களாகிய எங்களுக்கு நன்மை பயக்கின்றது... அதுதான்.. உலகிலுள்ள எல்லா (முஸ்லிமல்லாதவர்களின்) மீடியாக்களும் முஸ்லிம்களை பயங்கரவாதிகளாக, காட்டும் நேரமும், முஸ்லிம்களுக்கெதிரான அநியாயங்களை மறைக்கும் நேரமும் இவ்வாறான சமூக வலைத்தளங்கள் மூலம் உண்மையை மனச்சாட்சியுள்ள முஸ்லிமல்லாதோருக்கும் கொண்டு செல்லக்கூடியதாக உள்ளது, அவ்வாறே அத்தகைய மனட்சாட்சி உள்ளோரையும் அடையாளம் காணக்கொடியதாகவும் உள்ளது. எனவே, எந்தவொன்றும் நாங்கள் பயன்படுத்தும் முறையிலும், நோக்கத்திலுமே தங்கியிருக்கின்றது என்பதை நீர் புரிந்து கொள்ளவும்.

    அதேநேரம், உமக்கு பணிவான வேண்டுகோள்... கோழைகளைப்போல், கள்ளத்தனமான போர்வை போர்த்திக்கொண்டு எங்களுக்கு எதிராக கருத்து தெரிவிக்காமல் தைரியமாக உமது சொந்தப்பெயரில் வாரும்!



    ReplyDelete
  4. Jamaldeen, Urudu pesakkoodiyawarkal muslimkalay eppadi alaikkirarkal enru theydippaarungal. face book, utube patry kulappawaadikal pesawendaam. English perula waarathuku naan Thaw illa. Pesaththeriyaada Theewiraadikal Islaam pesuradaala Islaththitke Keywalam

    ReplyDelete
  5. Mr. Nizar, i pity at you for two thing. first., you go back to your first comment to know in what language you commented. 2nd, you immediately shown your original face calling us terrorist or extremist.

    ReplyDelete

Powered by Blogger.