இராணுவத்தின் இணையத்தளம் மீது, சைபர் தாக்குதல்
இராணுவத்தின் அதிகாரபூர்வ இணையத்தளம் மீது நத்தார் நாளன்று சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அடையாளம் தெரியாத குழுவொன்று, இராணுவ இணையத்தளத்துக்குள் புகுந்து, அதிலிருந்த தகவல்களைச் சி்தைக்க முயன்றது.
வெளிநாட்டில் உள்ள குழுவொன்றே இந்த சைபர் தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தது. எனினும், சிறிலங்கா இராணுவ தொழில்நுட்ப பிரிவு உடனடியாக, தடுத்து நிறுத்தி, தளத்தை மீளவும் இயங்கு நிலைக்கு கொண்டு வந்தது.
எனினும், சில மணிநேரமாக, இராணுவ இணையத்தளம் செயற்படவில்லை.
இதுதொடர்பாக சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீீர கருத்து வெளியிட்ட போது, சைபர் தாக்குதலுக்கான வாய்ப்புகள் தொடர்பாக உன்னிப்பாக அவதானிக்கப்பட்டு வருவதாகவும், இத்தகைய தாக்குதல்களில் இருந்து தகவல்களைப் பாதுகாப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாட்டில் இருந்து இதனை செய்வதாக இருந்தால், தோற்றுப்போன புலிப் பயங்கரவாதிகளின் அறுந்து போன வால்களாகத்தான் இருக்க வேண்டும்.
ReplyDeleteஏன் இலங்கையின் வெளிநாட்டு கொள்கை யில் எதிர்ப்பை காட்டும் நாடுகளும் செய்ய வாய்ப்பு உண்டல்லவா?
ReplyDelete