எங்களுடன் 'செல்பி' அடிக்காதீர்கள் - இலங்கையின் ஆதிவாசிகள் போர்க்கொடி
செல்பி மோகம் பட்டிதொட்டியெங்கும் பரவிவருகிறது. எங்கு சுற்றுலா சென்றாலும் 'செல்பி' எடுப்பதற்கே பெரும்பாலானோர் ஆர்வம் காட்டிவரும் நிலையில், இந்த 'செல்பி' மோகத்துக்கு இலங்கையின் ஆதிவாசிகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
தங்களைப் பார்வையிடுவதற்கு வருபவர்கள் தமது வரலாறு, கலாசாரம் என்பவை பற்றி அறிந்துகொள்வதற்கு ஆர்வம் காட்டுவதில்லை என்றும், மாறாக, புகைப்படம் எடுப்பதிலேயே குறியாக இருக்கின்றனர் என்றும் ஆதிவாசிகளின் தலைவரான ஊருவரிகே வன்னிலா எத்தோ கவலை வெளியிட்டுள்ளார்.
இலங்கையில் ஒருசில பகுதிகளிலேயே ஆதிவாதிகள் வாழ்ந்து வருகின்றனர். இதில் குறிப்பாக மஹியங்கனை தம்பான பகுதியிலேயே ஆதிவாசிகளின் தலைவர் இருக்கிறார். அங்கு அவர்களுக்குத் தனிக் கிராமமொன்றே இருக்கிறது.
மஹியங்கனை பகுதிக்குச் சுற்றுலா செல்பவர்கள் தம்பான பகுதிக்குச் செல்வதற்கு மறப்பதில்லை.
டிசம்பர் மாதம் பாடசாலை விடுதலை காலம் என்பதாலும், கிறிஸ்மஸ் பண்டிகை விடுமுறை என்பதாலும் மஹியங்கனை நோக்கிப் பலர் படையெடுத்த வண்ணமுள்ளனர். கடந்த நான்கு நாட்களில் மாத்திரம் ஆயிரக்கணக்கானோர் தம்பான பகுதிச்குச் சென்றுள்ளனர்.
அங்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் ஆதிவாதிகளுடன் படம் எடுத்து அதை முகநூலில் பதிவேற்றம் செய்வதில் கூடுதல் ஆர்வம்காட்டி வருகின்றனர். அதுவும் ஆதிவாசிகளுடன் செல்பி எடுத்துக்கொள்வதற்குப் போட்டிப்போட்டுக்கொண்டு வரிசையில் நிற்கின்றனர்.
இந்நிலையிலேயே தம்மைப் பார்வையிடவரும் சுற்றுலாப் பயணிகளின் இந்த நடவடிக்கையை ஆதிவாசிகளின் தலைவர் கடுமையாகக் கண்டித்துள்ளார்.
நியாயமான கோவம்.
ReplyDelete