சவுதி அரேபியா + இலங்கை ராஜதந்திர உறவில், பாதிப்பு ஏற்படாது - தலதா
சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை பெண்ணை பாதுகாப்பதற்கான முழுமையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்த செயற்பாடுகள் எச்சரிக்கையுடன் முன்னெடுக்கப்படுதாகவும், அதனால் சவுதி அரேபியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான ராஜதந்திர உறவில் பாதிப்புகள் ஏற்படாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தகாத தொடர்பை பேணியமைக்காக குறித்த பெண்ணை கற்களை எறிந்து கொலை செய்யுமாறு, ரியாத் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த தீர்ப்புக்கு எதிராக இலங்கை சார்பில் மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த மனு விசாரணை நிறைவடையும் வரையில், அவர் மரண தண்டனைக்கு உள்ளாக்கப்படமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment