பொது இடத்தில் தாய்பால் கொடுக்கலாமா..?
பொது இடங்களில் தாய்பால் கொடுக்க பெரும்பாலான தாய்மார்கள் முகம் சுளிப்பதை தவிர்க்கும் வகையில், அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த கனேடிய தாயார் ஒருவர் செய்த செயல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
கனடாவில் உள்ள ஓண்டாரியோ நகரில் Rebecca Dunbar(40) என்ற தாயார் தனது 3 குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.
குழந்தைகளுடன் வெளியில் செல்லும்போது பொது இடங்களில் அவர் தனது குழந்தைகளுக்கு தாய்பால் கொடுத்ததை சிலர் ஏற்றுக்கொள்ளாமல் இருந்தது அவருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது.
பொது இடங்களில் குழந்தைகளுக்கு தாய்பால் கொடுப்பது ஒன்றும் அவமரியாதையான செயல் இல்லை என்பதை மக்களுக்கு உணர்த்த வேண்டும் என அவர் முடிவு செய்துள்ளார்.
இதனை செயல்படுத்த சில தினங்களுக்கு முன்னர் வீட்டிற்கு அருகில் உள்ள ஒரு வணிக வளாகத்திற்கு சென்றுள்ளார்.
கிறிஸ்துமஸ் நெருங்கி வருவதால், அங்கே மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்துள்ளது. அதேபோல், அங்கு ’சாண்டா’ எனப்படும் கிறிஸ்துமஸ் தாத்தா ஒருவரும் இருந்துள்ளார்.
அவரிடம் நெருங்கிய தாயார், அவரது காதில் ஏதோ கூற அதற்கு அந்த கிறிஸ்துமஸ் தாத்தாவும் ஒப்புக்கொண்டார்.
பின்னர், அங்குள்ள ஒரு மேசையில் கிறிஸ்துமஸ் தாத்தா அமர, அவரது மடியில் தாயார் அமர்ந்து தனது குழந்தைக்கு தாய்பால் கொடுத்துள்ளார்.
இதனை புகைப்படம் எடுக்குமாறு தனது தோழிகளிடம் கூறியுள்ளார். இந்த காட்சியை கண்டு பலரும் முகம் சுளித்தவாறு அங்கிருந்து நகர்ந்து சென்றுள்ளனர்.
வீட்டிற்கு திரும்பிய அந்த தாயார், புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு ‘பொது இடங்களில் தாய்பால் கொடுப்பது அவமானத்திற்குரிய செயல் அல்ல’ என கூறியுள்ளார்.
ஆனால், தாயாரின் எதிர்ப்பார்ப்பு பொய்த்து போனது. இந்த புகைப்படங்களை பார்த்து சுமார் 75 சதவிகிதத்தினர் எதிர்மறையான கருத்துக்களையே பதிவு செய்துள்ளனர்.
உதாரணத்திற்கு ஒரு பெண் கூறுகையில், ‘நாகரீகம் எவ்வளவு மாறினாலும் கூட ஒரு சில விடயங்கள் மாற அதிக காலங்கள் ஆகலாம். அதில் பொது இடங்களில் தாய்பால் கொடுக்கும் ஒரு விடயமும் ஆகும்.
நமது சமுதாயம் இன்னும் அந்தளவிற்கு பக்குவம் அடையவில்லை’ என அந்த பெண் கருத்து தெரிவித்துள்ளார்.
இஸ்லாமிய முல்லாக்கள் இதனை சரி என்று ஏற்றுக் கொள்வார்களா?
ReplyDeleteநிச்சயமாக ஏற்றுக் கொள்ள மாட்டோம் அநாகரீகம்
Deleteகிறிஸ்துமஸ் தாத்தா, கிறிஸ்தவ சகோதார சகோதரிகளை தலை குனிய வைக்கும் செயல்.
ReplyDeleteஇவ்வாறு ஓருரிவர் செய்யும் காரியத்தினால்தான் எல்லோருக்கும் தலை குனிவு ஏற்பட்டுள்ளது.
"நாகரீகம் எவ்வளவு மாறினாலும் கூட ஒரு சில விடயங்கள் மாற அதிக காலங்கள் ஆகலாம்.""
ஆமாம், அவ்வாறான ஒரு காலம் வரவே இருக்கிறது. அதுதான் இவ்வுலகம் அழியும் காலம்.
அவ்வேளை, தீய செயல்களைக் கண்டு முகம் சுளிப்பதற்குக்கூட ஒருவன் இருக்கமாட்டான்.
நிலவன் நீங்கள் இப்படி சம்பந்தமோ நியாயமோ இல்லாமல் எழுதி தயவு செய்து உங்கள் சுய ரூபத்தை வெளிக்காட்டிக் கொள்ள முற்பட வேண்டாம்
ReplyDelete