Header Ads



இலங்கையர் சார்பாக மன்னர் சல்மானிடம், வழங்கப்பட்ட கருணை மனு இதுதான்...!

இரு புனித பள்ளி வாசல்களின் காவலர்
மாண்புமிகு மன்னர் ஸல்மான் பின் அப்துல் அஸீஸ் அல் சவுத்,
ரியாத் அரச மாளிகை.
சவுதி அரேபிய இராச்சியம்.

சவுதி அரேபிய தூதரகம் ஊடாக
43 ஹோட்டன் பிளேஸ்,
கொழும்பு 7

மாண்பு மிகு மன்னர் அவர்களே, அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹூ

இலங்கை வீட்டுப் பணிப்பெண் மற்றும் புலம்பெயர் ஆண்; பணியாளர் மீதான கருணை மனு

விபச்சாரக் குற்றச்சாட்டின் பேரில் கல்லெறிந்து கொல்லப்பட வேண்டுமென தீர்ப்பளிக்கப்பட்டுள்ள பணிப்பெண் மற்றும் 100 கசையடி வழங்கப்பட வேண்டும் என  தீர்ப்பளிக்கப்பட்டுள்ள இன்னொரு பிரதிவாதியான ஒரு இலங்கை புலம்பெயர் பணியாளர் தொடர்பாகவும் முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீலங்கா ஆழ்ந்த கவலை கொள்வதோடு அவர்கள் மீது கருணை காட்டுமாறும் இலங்கை மக்கள் சார்பாகத் தாங்களை வேண்டி நிற்கிறது.

துரதிஷ்டவசமாக, பணிப்பெண் கல்லெறிந்து கொல்லப்படுதல் மற்றும் கசையடியை  எதிர்நோக்கும்; ஆண் பணியாளர் என்பன சவுதி அரேபியாவின் நீதி மற்றும் கலாச்சார நடைமுறைகளை அறியாததன் விளைவே என முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீலங்கா கருதுகின்றது. அவர்களது இந்த எழுத்தறிவின்மை மற்றும் தரித்திர நிலை என்பவற்றுக்கு ஒரே காரணம், தமது சொந்த நாட்டில் குறைந்தபட்ச கல்வியைக் கூட பெற்றுக்கொள்ள முடியாத ஒரு சமூக பொருளாதார பின்னணியில்  சட்ட மற்றும் கலாச்சார அமைப்பு சிக்கல்கள் பற்றி அறிந்துகொள்ள முடியாது ஒதுக்கப்பட்ட அவர்களது பின்தங்கிய நிலையே ஆகும்.  நாம், சவூதி அரேபிய இராச்சியத்தின் சட்டத்தையும்; சவுதி அரேபிய நீதித்துறையின் தீர்ப்புகளையும் மதிக்கிறோம். அதே நேரம், எடுக்கப்பட்ட தீர்மானத்தை மிகவும் மனிதாபிமான அடிப்படையில் அணுகி குற்றம் சாட்டப்பட்டுள்ள இரு இலங்கையர் மீதும் கருணை காட்டுமாறு மிகத் தாழ்மையுடன் மாண்புமிகு மன்னரை நாம் வேண்டி நிற்கிறோம்;.

தனது விருப்பத்துக்கு மாறாக வெளிநாட்டில் வேலை தேடவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாக்கப்பட்ட அவளது குடும்பத்தினர் இலங்கையில் எதிர்நோக்கிய இன்னல்களின் அசாதாரண நிலையைக் கருத்தில் கொண்டே இம்மனுவை நாம் முன்வைக்கிறோம். சொந்த நாட்டில் அவள் எதிர்கொண்ட மோசமான நிலைமைகள் வேறுவழியின்றி சவுதி அரேபியாவில் குறைந்த ஊதியத்தில் ஒரு பணிப்பெண்ணாக வேலை செய்வதற்கு அவளை நிர்பந்தித்தது. மாண்புமிகு மன்னர் அவர்களே, கணவனால் ஒரு பொருத்தமன வேலையைத் தேடிக்கொள்ள முடியாத நிலையில், இன்னும் பருவ வயதையடையாத தன்னுடைய குழந்தைகளின் கல்வி, உணவு, உடை போன்ற முக்கிய தேவைகளைக்கூட நிறைவேற்றிக்கொள்ள முடியாது அவளது வாழ்க்கையைச் சுற்றியிருந்த பயங்கரமான பொருளாதார கஷ்டங்களே அவளது குடும்பத்தினரைப் பிரிந்து செல்லத் துண்டியது. இந்த இழிவான பொருளாதார மற்றும் சமூக நிலைமைகள், சவுதி அரேபியாவில் ஒரு வீட்டுப் பணிப்பெண்ணாக, தனது சம்பளத்தின் மூலம்; பெற்றுக்கொள்ளும் அற்ப சேமிப்பை அவளது பிரியமானவர்களை வாழ வைக்கும் ஒரு வழிமுறையாக வழங்க வேண்டிய கட்டாயத்தை அவளுக்கு ஏற்படுத்தியது.

சமூகத்தில் பொருளாதார நெருக்கடி மற்றும் நிரந்தரமாக ஓரங்கட்டப்படுதல்;  என்பவற்றிலிருந்து ஓரளவாவது தனது குடும்பத்தினரை மீட்க வேண்டும் என்பதற்காக மட்டுமே சுய தியாகத்தின் மூலம் அவ்வாறு செய்தாள்;. உண்மையில், போதிய பண வருமானம் கிடைக்காது என்பதை   அறிந்த நிலையிலும் 2013 முதல் சவுதி அரேபியாவில் வீட்டுப் பணிப்பெண்ணாக வேலை செய்ய அவள் எடுத்த முடிவு சொந்த நாட்டில் அவளது நாதியற்ற நிலையை விளக்கப் போதுமானதாகும்.

மறுபுறம் கடன்சுமையில் மூழ்கியுள்ள அவளது அன்புக்குரிய குடும்பத்தின் ஜீவனோபாய தேவைகளையாவது பூர்த்தி செய்துகொள்ளக்கூடிய ஒரே வழிமுறையாக இது அமைந்தது. இந்த நிலைமைகள் அவளது உடல் மற்றும் உள ரீதியான நல்வாழ்வில் வேதனையை ஏற்படுத்தி அவளையறியாமலேயே இந்த நிலைக்கு அவளை இட்டுச் சென்றுள்ளது. மாண்புமிகு மன்னர் அவர்களே, அவளது நிலைமையை ஒரு சட்ட அடிப்படையிலன்றி மனிதாபிமான விளக்கத்துடனேயே அணுகவேண்டும் என்பதே  எமது வேண்டுகோளாகும். எனவே, அவளுக்கு தேவைப்படுவதெல்லாம் மனிதாபிமான அடிப்படையிலான தாங்களது கருணை  மற்றும் அன்பான மன்னிப்பேயாகும்.

மாண்புமிகு மன்னர் அவர்களே, நாம் மேலே வலியுறுத்திய பொருளாதார கஷ்டங்கள் பாதிக்கப்பட்டவரின் சொந்த வடிவமைப்பு அகநிலை படைப்புகள் அல்ல என்பதையும்  ஆனால் அது அவளது சொந்த நாட்டின் அரசியல் பொருளாதார நிலையின் அபிவிருத்தி குன்றிய ஒரு பின்தங்கிய நிலைமையின் நேரடி விளைவாக உள்ளது என்பதையும் தங்களின் மேலான கவனத்துக்கு கொண்டு வர என்னை அனுமதியுங்கள். அண்மையில் இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் தனது பொருளாதார கொள்கை அறிக்கையில், இலங்கையின் மக்கள் தொகையில் 43மூ மக்கள் ஒரு தனிநபரின் தினசரி உணவு தேவைகளைக்கூட  பூர்த்தி செய்ய முடியாத வகையில் ஒரு நாளைக்கு வெறும் 2 டாலர்; வருமானத்தில் வாழ்வதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஒரு சமீபத்திய உலக சுகாதார ஸ்தாபன ஆய்வு, இலங்கையின் 40மூ கர்ப்பிணி பெண்கள் மற்றும் 50மூ பாடசாலைக் குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைவினால் அவதியுற்று வருவதாக எடுத்துக் காட்டியுள்ளது. மேலும், இலங்கையில் உள்ள 70மூ தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு, வேலை உத்தரவாதம், ஓய்வூதிய நலன்கள், போன்றவை எதுவுமற்று, தமது அன்றாட தேவைகளைக்கூட பூர்த்தி செயது கொள்ள முடியாத மிகக் குறைந்த கூலிகளை பெற்று ஆபத்தானதும் அசாதாரணமானதுமான வேலைகளைச் செய்கின்றனர். மக்களின் கண்களுக்கு எட்டாத இந்த பரிதாபகரமான பொருளாதார யதார்த்தங்களே நாட்டுக்கு  வெளியே அபாயகரமான தொழிலை நாடிச் செல்லும் இலங்கை பெண்களின் நிலைமைகளுக்குப் பொறுப்பாக உள்ளது.

குற்றம் சாட்டப்பட்டுள்ள பணிப்பெண்ணின் சொந்த நாட்டில், அவர்களால் எதிர்கொள்ள முடியாத இவ்வாறான சமூக, பொருளாதார யதார்த்தங்கள் இயல்பாகவே அவர்களைப் படிப்பறிவில்லதவர்களக ஆக்கி இறுதியில் சட்ட நெறிமுறைகளில் பரிச்சயமற்றவர்களாக  ஆக்கிவிடுகிறது என்ற உண்மையை தாங்களது மேலான கவனத்துக்குக் கொண்டுவர அனுமதிக்குமாறு வேண்டுகிறேன். அவளது தற்போதைய நிலைக்கு அவளை இட்டுச்சென்ற அவளது பரிதாபகரமான பின்னணியை மனதிற்கொண்டு அவளையும் ஆண் பணியாளரையும் மன்னித்து வாய்விட்டுக்கூற முடியாத வேதனைமிக்க மரணத்திலிருந்து காப்பாற்றி அவர்களது தாய்நாட்டின்  சட்டத்தின் அடிப்படையில் விசாரனைகளை மேற்கொள்ள வசதியாக அவர்கள் இருவரையும் அவர்களது சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்புமாறு தாங்களை மன்றாடிக் கேட்டுக்கொள்கிறோம்.

அவள் இப்போதும்; எப்போதும் சமுதாயத்துக்கு ஒரு அச்சுறுத்தலாக இருக்கமாட்டார். சம்பவம் பொருளாதார மற்றும் சமூக அந்நியப்படுத்தலின் உந்துதலால்; ஏற்பட்டதே அன்றி; சாதாரண பொதுமக்கள் வாழ்க்கை நிலைமைகளால் நடந்தது அல்ல. அவள் மற்றும் ஆண் பணியாளர்கூட ஏற்படப்போகும் ஆபத்தான விளைவுகளை அறிந்திருந்தும் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்ட நேர்மையைக் கருத்தில் கொள்ளும்போது அது சமூகத்திற்கு நன்மை பயப்பதாகவும் இருக்கலாம். மேலும், அவரது குழந்தைகள், பெற்றோர்கள் மற்றும் குடும்பம்  அவரது விடுதலையினால் அளவற்ற மகிழ்ச்சியடைவார்கள். வளர்ந்துவரும் அவளது குழந்தைகளுக்கு எல்லாவற்றையும்விட அவரரகளது வாழ்வில் இந்த முக்கியமான கட்டத்தில் தாயின் அரவணைப்பே தேவையாக உள்ளது. இந்தத் தீவிர மனக்குறைகளை கருத்தில் கொண்டு  மாண்புமிகு மன்னர் அவர்கள்,  மரண தண்டனையிலிருந்து அவளை விடுவிப்பதோடு ஆண் பணியாளரையும்;; அவர்களது தாயகத்திற்கு திருப்பி அனுப்புவீர்கள் என்று திடமாக நம்புகிறோம்;.

மாண்புமிகு மன்னர் அவர்களே, முஸ்லிம் சமூகம் எமது அரசியலமைப்பின்படி சம அந்தஸ்து கொண்ட ஒரு சிறுபான்மை சமூகமாக வாழ்கிறது. தாங்களது தலையீட்டின் மூலம் துரதிருஷ்டவசமாக பாதிக்கப்பட்ட இவ்விருவருக்கும்  மன்னிப்பு அளிக்கப்படுமானால் இலங்கையில் இஸ்லாம் மேலும் மேம்பட வழிவகுக்கும்.

வஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹூ

5 comments:

  1. Are you asking the king Brother Fahim? Guess it will take a few days!

    ReplyDelete
  2. இது சம்பந்தப்பட்ட கருத்துக்களை கூறுவதில் மனம் அஞ்சுகிறது அவர்களின் விதிகள் எப்படி இருக்குறதோ அப்படியே நடக்கும் தண்டனையை வகுத்தவனும் அவன் தாராளமாக மன்னிப்பு கொடுப்பதும் அவன்தான் அல்லாஹ் ஆனால் இந்த உலக தண்டனையை விட மறுமையின் தண்டனை கடுமையானது,(ஒரு ஹதீஸ் இவ்வுலகில் யாருடைய குற்றம் கண்டு பிடிக்கப்பட்டு இவ்வுலகில் அதர்க்குரிய தண்டனை வழங்கப்பட்டுவிட்டதோ அவர் மறுமையில் தப்பித்துவிடுவார் ஆனால் யாருடைய குற்றம் கண்டுபிடிக்கபடாமல் உள்ளதோ அதன் கணக்கு அல்லாஹ்விடம் உண்டு)இந்த இடத்தில் நாம் சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம் அல்லாஹ் அஃலம்

    ReplyDelete
  3. இவ்வுலக்கத்தில் தஹ்பா மீட்சியளிக்ககூடிய ஒன்று அல்லாஹ்வும் அதைத்தான் எதிர்பார்க்கிறான். அல்லா மன்னிப்பவன் மகா கிருபையாளன்.

    ReplyDelete
  4. இந்தத் தண்டனையின் (ஷரீஆ சட்டம் ) தெளிவான விளக்கம் முப்தி இஸ்மாயீல் மெனக் அவர்களால் அருமையாகத் தரப்பட்டுள்ளது. பின் வரும் Youtube Link ஐ நோக்கவும்.
    https://www.youtube.com/watch?v=Vu8EbPk7wR4

    ReplyDelete

Powered by Blogger.