Header Ads



வடக்கு முஸ்லிம், அமைப்புக்களின் கவனத்திற்கு..!

வடக்கு மாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பாக வடக்கு முஸ்லிம் சமூக அமைப்புகளுடனான விஷேட கலந்துரையாடல்

22-12-2015 – பிற்பகல் 02:00 மணிமுதல் வவுனியா பிராந்திய சுகாதராப் பணிமனை கேட்போர் கூடம்

அன்புடையீர்  அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு

11-11-2015 அன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அவர்களினால் ஒன்றுகூட்டப்பட்ட மீள்குடியேற்றம் தொடர்பிலான விஷேட சந்திப்பினைத் தொடர்ந்து மாகாண மட்டங்களில் முதல் கட்ட தகவல் திரட்டும் சந்திப்புகள் வடக்கு மாகாணசபையின் புனர்வாழ்வு மீள்குடியேற்ற அமைச்சர் வைத்தியக் கலாநிதி ப.சத்தியலிங்கம் தலைமையில்  மாவட்டந்தோறும் நடைபெற்றன. அவற்றிலிருந்து வடக்கு மாகாணத்திற்கான மீள்குடியேற்றம் தொடர்பில் பின்வரும் விடயங்கள் தயாரிக்கப்பட்டு முன்வைக்கப்படவிருக்கின்றன.

· வடக்கு மாகாண மீள்குடியேற்றத்தின் தற்போதைய நிலைமை
· வடக்கு மாகாண மீள்குடியேற்றத்திற்கான கொள்கை முன்மொழிவுகள்
· வடக்கு மாகாணத்திற்கான மீள்குடியேற்ற தேவைகளும்இ நடைமுறைத் திட்டங்களும்

மேற்படி விடயம் தொடர்பாக மாவட்ட மட்டங்களில் இடம்பெற்ற அரசாங்க அதிபர் தலைமையிலான கூட்டங்களில் உதவிபுரியும் அரச சார்பற்ற நிறுவனங்களும் அழைக்கப்பட்டிருந்தன. எனினும் வடக்கில் மீள்குடியேறுகின்ற முஸ்லிம் மக்களது கருத்துகள் மாகாண ரீதியிலும் முழுமையாக உள்வாங்கப்படவில்லை என்ற பொதுவான ஆதங்கம் நிலவுகின்ற காரணத்தினால் மீள்குடியேற்றம் தொடர்பில் மேலே குறிப்பிட்ட விடயப்பரப்புகளுள் மேலதிகமான இணைக்கவேண்டிய விடயங்கள் இருப்பின் அவற்றை உள்வாங்குவதற்கான ஒரு வாய்ப்பாக வடக்கு மாகாண சமூக அமைப்புகளுடனான விஷேட சந்திப்பினை எதிர்வரும் 22-12-2105 அன்று நடாத்துவதற்குத் திட்டமிட்டிருக்கின்றோம். எனவே மேற்படி சந்திப்பில் வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் மேலே குறிப்பிட்ட தலைப்புகளில் தகவல்களை ஒழுங்குபடுத்திய அமைப்பில் முன்வைக்கும் ஏற்பாடுகளுடன் கலந்துகொள்ளுமாறு அன்போடு அழைக்கின்றேன்.

மேற்படி நிகழ்வில் கலந்துகொள்வதற்கு சிவில் சமூக அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் உலமாக்களுக்கு பொதுவான அழைப்பு இத்தால் விடுக்கப்படுகின்றது. 

வஸ்ஸலாம்
நன்றி
இவ்வண்ணம்

அ.அஸ்மின்
வடக்கு மாகாணசபை உறுப்பினர்

No comments

Powered by Blogger.