பௌத்த பிக்குகளை, பொதுமக்கள் சந்தேக கண்ணில் நோக்குகின்றனர் - ஜனாதிபதி மைத்திரி
இளம் பௌத்த பிக்குகள் தொடர்பில் மக்கள் மத்தியில் நம்பிக்கையற்ற தன்மை காணப்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா அமரபுர நிக்காயவின் பீடாதிபதி தெவுல்தெனிய ஞானீஸ்ஸர தேரரின் 100ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கொழும்பில் இன்று நடைபெற்ற விசேட நிகழ்வில் பங்கேற்ற போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
பௌத்த சாசனத்தில் இணைந்துகொள்ளும் பௌத்த பிக்குகளை, சாதாரண பொதுமக்கள் சந்தேக கண்ணில் நோக்குகின்றனர்.
இளம் பௌத்த பிக்குகள் தொடர்பில் மக்கள் மத்தியில் அச்ச நிலைமை காணப்படுகின்றது. இந்த நிலைமையில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டியது மிகவும் அவசியம்.
பௌத்த பிக்குகள் தொடர்பிலான மக்கள் நம்பிக்கையை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலர் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment