உலகின் மிகப்பெரிய மனித நேயத்தை, உலகிற்கு உணர்த்திய சென்னை முஸ்லிம்கள்..!
சென்னையில் பாதிக்கபட்ட மக்களில் அதிகமானோர் மாற்று மதத்தவர்களே.
பாதிக்கபட்டவனின் மதத்தை பார்க்காமல், அவனை மனிதனாக மட்டுமே பார்க்க கற்று தருகிறது இஸ்லாம்.
அதன் எதிரொலியை தமிழகம் எங்கும் முஸ்லிம்களிடம் பார்க்க முடிந்தது
சென்னையில் பாதிக்கபட்ட நம் தொப்பிழ் கொடி உறவுகளுக்காக தமிழகத்தில் மட்டும் இன்றி உலெகெங்கும் உள்ள முஸ்லிம்கள் தனது சமுதாயத்திடம் கையேந்தி நின்றனர்
வெள்ளிகிழமை நடைபெறும் சிறப்பு பிரார்தனையில் பங்கு பெற வந்தவர்களிடம் முஸ்லிம் சமுதாயம் பாதிக்கபட்ட மக்களுக்காக இன்று வசூல் வேட்டையை நடத்தியது
முஸ்லிம்களின் இறைஇல்லங்களில் இன்று வெள்ள சேதத்தால் உருவான இழப்புகளை தெளிவாக விளக்கி உங்கள் தொப்பிழ் கொடி உறவுகளுக்கு உதவுங்கள் என்ற உருக்கமான வேண்டுகோள் ஒவ்வொரு பள்ளியிலும் விடுக்க பட்டது
பள்ளியின் வெளிபுறங்களில் பல்வேறு இஸ்லாமிய அமைப்பை சார்ந்தவர்கள் துண்டு ஏந்தி நின்றனர்
ஏழை சமுதாயமான முஸ்லிம் சமுதாயம் வாரிவாரி வழங்க வேண்டும் என்று தான் விரும்புகிறது
இல்லாமையும் கல்லாமையும் அவர்களை வாட்டி வதைக்கும் நிலையிலும் தம்மால் இயன்ற உதவிகளை தமது தொப்பிழ் கொடி உறவுகளுக்காக செய்துள்ளனர்
எங்கள் இறை இல்லங்கள் பாதிக்கபட்ட மக்களின் உறைவிடங்களாக மாறியது எங்கள் வெள்ளி மேடைகள் பாதிக்கபட்ட எங்கள் உறவகளுக்காக உருக்கமான வேண்டுகோளை பதிவு செய்து பாதிக்க பட்ட மக்களுக்காக நிதி திரட்டியது
ஒரு சமுதாயம் தமது வழிபாட்டு தலங்களையே மனிதநேயத்தின் அடையாள சின்னமாக மாற்றுவதை விட உயர்ந்த மனித நேயம் வேறு எதுவாக இருக்கமுடியும்?
Post a Comment