Header Ads



நிமால் சிறிபால சில்வாவில், நல்ல மனசு

என்னுடைய அமைச்சுப் பதவியை பறித்து என்னை வீட்டுக்கு அனுப்புவதற்கான கடிதங்களை தயார் செய்தவர்களின் பிள்ளைகளுக்கு தான் நியமனக் கடிதங்களை வழங்கியுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் சேவைகள் நிமால் ஸ்ரீபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

இன்று கொழும்பு டவர் மண்டபத்தில் இடம்பெற்ற புகையிரத சேவை தொழிநுட்ப உதவியாளர்கள் 380 பேருக்கு நியமனங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்துக் கொண்ட போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் என் பதவியை கவிழ்த்து என்னை வீட்டுக்கு அனுப்ப நினைத்த வர்த்தக தொழிற்சங்க தலைவர்களின் பிள்ளைகள் பலரும் இன்று இங்கு அமர்ந்திருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தொழிற்சங்கங்களின் தேவைகளின் படி தம்மால் செயற்பட முடியாது என்று தெரிவித்துள்ள அமைச்சர், ரயில்வே திணைக்களத்திலோ அல்லது இலங்கை போக்குவரத்து சபையிலோ வழங்கப்பட்ட நியமனங்கள் அனைத்தும் எந்த ஒரு அரசியல் கட்சி சார்பாகவும் வழங்கப்பட்டவை அல்ல என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.s

2 comments:

  1. கொடுத்தது நல்ல மனசுதான் ஆனால் அதை வாங்கவந்த பிள்ளைகளிடமே அதை சொல்லிக்காட்டியது நல்ல மனசின் அடையாளமா?

    ReplyDelete
  2. තාත්තා කරපු වරදට දෙන් නුබලා මගෙ ලෙව කාපල්ලා!!!
    என்று சொல்வதுபோல் இருக்கின்றது இவரது செயல்.

    ReplyDelete

Powered by Blogger.