Header Ads



வஸீம் தாஜு­தீனின் கொலை­யா­ளிகள், நாட்­டி­லி­ருந்தும் வெளி­யேறாதபடி விமான நிலை­யங்­களுக்கு­ அறி­வு­றுத்­தல்

பிர­பல ரக்பி வீரர் வஸீம் தாஜு­தீனின் கொலை­யா­ளி­களை குற்றப் புல­னாய்வுப் பிரிவு இனம் கண்­டுள்­ள­தாக தக­வல்கள் தெரி­விக்­கின்­றன. ஆனால் கொலை­யா­ளி­களின் விப­ரங்கள் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக இது­வரை வெளி­யி­டப்­ப­ட­வில்லை.

விப­ரங்கள் வஸீம் தாஜு­தீனின் கொலை வழக்கு விசா­ர­ணையின் அடுத்த அமர்வின் போது வெளி­யி­டப்­ப­டு­மென எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

கொலை­யுடன் பலர் சம்­பந்­தப்­பட்­டி­ருப்­ப­தா­கவும் அவர்கள் பாது­காப்புப் பிரிவைச் சேர்ந்­த­வர்கள் எனவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. சம்­பந்­தப்­பட்­ட­வர்கள் நாட்­டி­லி­ருந்தும் வெளி­யேறிச் செல்­லாத வகையில் அவர்­க­ளது அடை­யாள அட்டை இலக்­கங்கள் குடி­வ­ரவு குடி­ய­கல்வு திணைக்­க­ளத்­துக்கு வழங்­கப்­பட்­டுள்­ள­துடன் இது தொடர்­பாக விமான நிலை­யங்­க­ளுக்கும் அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளது.

வஸீம் தாஜுதீன் கடந்த 2012 ஆம் ஆண்டு மே மாதம் 17 ஆம் திகதி அதி­காலை நார­ஹேன்­பிட்டி பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட சாலிகா மைதா­னத்­துக்கு அருகே எரிந்து கொண்­டி­ருந்த காருக்­கு­ளி­ருந்து சட­ல­மாக மீட்­கப்­பட்டார்.

கடந்த பெப்­ர­வரி மாதம் வரை தாஜுதீன் கொலை தொடர்­பி­லான விசா­ர­ணைகள் நார­ஹேன்­பிட்டி பொலி­ஸா­ரி­னாலே முன்­னெ­டுக்­கப்­பட்டு வந்­தது.

நார­ஹேன்­பிட்டி பொலி­ஸா­ருக்கு சம்­பவம் தொடர்­பி­லான அரச இர­சா­யன பகுப்­பாய்­வா­ளரின் அறிக்கை மூன்று வரு­டங்­க­ளுக்குப் பின்பு கடந்த பெப்­ர­வரி மாதமே கிடைத்­தது.

இந்­நி­லையில் இது தொடர்­பான விசா­ர­ணைகள் குற்றப் புல­னாய்வுப் பிரி­வி­ன­ருக்கு பாரப்­ப­டுத்­தப்­பட்­டமை குறிப்­பி­டத்­தக்­கது.

இந்­நி­லையில் தெஹி­வளை மைய­வா­டியில் அடக்கம் செய்­யப்­பட்­டி­ருந்த வஸீமின் ஜனாஸா கடந்த ஆகஸ்ட் 10 ஆம் திகதி தோண்டி எடுக்­கப்­பட்டு பிரேத பரி­சோ­த­னைக்­குட்­ப­டுத்­தப்­பட்­டது.

எரிந்த நிலையில் மீட்ப்­பட்ட காரும் விசேட பகுப்­பாய்­வா­ளரின் ஆய்­வுக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டது.

வஸீமின் பணப்பை அவ­ரது கைய­டக்கத் தொலை­பே­சி­யுடன் ஒரு­வரால் கண்­டெ­டுக்­கப்­பட்டு பலரின் கைக­ளுக்கு மாறி பின்பு சி.ஐ.டி. யின் கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்டு வரப்­பட்­டமை குறிப்­பி­டத்­தக்­கது.

கைய­டக்கத் தொலை­பே­சி­யி­லி­ருந்து சி.ஐ.டி. பெற்றுக் கொண்ட பல தகவல்களின் கீழ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

பிரேத பரிசோதனைகளை முன்னெடுத்த முன்னாள் சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கை யின்படி வஸீம் தாக்கப்பட்டுள்ளார் எனத் தெரியவருகிறது.

No comments

Powered by Blogger.