Header Ads



வட மாகாண சபை அமர்வில், எந்த முஸ்லிம் உறுப்பினர்களும் இல்லை

வட மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட கல்வி நியதிச்சட்டம் தொடர்பான வடமாகாண கல்வி அமைச்சின் கல்வி நியதிச்சட்டம் தொடர்பான மாகாணசபையின் விசேட அமர்வில் எந்த ஒரு முஸ்லீம் உறுப்பினர்களும் கலந்துகொள்ளவில்லை. எனினும் எவ்வித எதிர்ப்புக்கள் இல்லாமல் நிறைவேற்றப்பட்டது. 

அதேவேளை, குறித்த நியதிச்சட்டம் மாகாணசபை உறுப்பினர்களுக்கு ஆங்கில மொழியில் வழங்கப்பட்டமை தொடர்பில் மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.

கல்வி நியதிச்சட்டத்தை அங்கீகரிப்பதற்கான விசேட அமர்வு இன்று மாகாணசபை பேரவை செயலகத்தில் நடைபெற்றிருந்தது. இதன்போது கல்வியமைச்சின் நியதிச்சட்டத்தை கல்வியமைச்சர் த.குருகுல ராஜா சபையில் முன்மொழிந்திருந்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் மாகாணசபை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட நியதிச்சட்டம் தமிழ் மொழியில் இல்லாமல் ஆங்கில மொழியில் வழங்கப்பட்டிருக்கின்றது.

இவ்வாறு மற்றைய அமைச்சுக்கள் செய்திருந்தால் கூட ஒத்துக் கொள்ளலாம். ஆனால் கல்வியமைச்சு செய்திருப்பதை ஒத்துக் கொள்ள முடியாது. கல்வியமைச்சு இவ்வாறு செய்திருக்க கூடாது. இவ்வாறு செய்தாயின் வடமாகாணசபையின் மேன்மைபெறும் மொழியாக ஆங்கிலத்தையா வைத்திருக்கின்றீர்கள் என கேள்வி எழுப்பினார்.

இந்நிலையில் பதில் வழங்கிய அவைத்தலைவர் இந்த நியதிச்சட்டம் முன்னதாகவே அங்கீகரிக்கப்பட்ட நிலையில் ஆளுநரிடம் அனுப்பி வைக்கப்பட்டு பின்னர் திருத்தங்களுடன் சபை பரிசீலணைக்காக வந்திருக்கின்றது. எனவே இதன் தமிழ் மொழிபெயர்ப்பு உள்ளது. ஆனால் அதனை இங்கே எடுத்து வந்திருக்கவில்லை. எனவே எதிர்க்க வேண்டியதில்லை. என்றார்.

இதனையடுத்து நியதிச்சட்டம் பரிசீலணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு சில திருத்தங்களுடன் சபையில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.