Header Ads



‘தனது குற்றத்திற்காக இஸ்ரேல் விலைகொடுக்கும்’ ஹிஸ்புல்லாஹ்

சிரியா மீது வான் தாக்குதல் நடத்தி தனது முன்னணி தலைவர்களில் ஒருவரை கொன்தற்கு இஸ்ரேல் பதில் கூற வேண்டி வரும் என்று ஹிஸ்புல்லாஹ் அமைப்பு எச்சரித்துள்ளது.

கொல்லப்பட்ட சமீர் கன்தாரின் இறுதிக்கிரியை நேற்று முன்தினம் பெய்ரூட்டில் இடம்பெற்றபோது, ஹிஸ்புல்லாஹ் அமைப்பின் நிறைவேற்று கவுன்ஸில் தலைவர் ஹாஷிம் சபித்தீன், ‘தனது குற்றத்திற்காக இஸ்ரேல் விலைகொடுக்கும்’ என்று எச்சரித்தார்.

கன்தாரின் மரணத்தை இஸ்ரேல் வரவேற்றபோதும், அந்த தாக்குதலுக்கு இதுவரை பொறுப்பேற்கவில்லை. கன்தார் சுமார் 30 ஆண்டுகள் இஸ்ரேலில் சிறை அனுபவித்தவர் என்பதோடு 2008 ஆம் ஆண்டிலேயே விடுதலையானார்.

டமஸ்கஸில் கடந்த சனிக்கிழமை மாடிக் குடியிருப்பு ஒன்றின் மீது இஸ்ரேல் போர் விமானங்கள் நடத்திய ஏவுகணை தாக்குதல்களில் கன்தாருடன் மேலும் எட்டுப் பேர் கொல்லப்பட்டனர்.

கன்தாரின் இறுதிக்கிரியையில் பங்கேற்ற ஆயிரக்கணக்கானவர்கள், ‘இஸ்ரேல் ஒழிக’ என்று கூச்சலிட்டனர். தெற்கு பெய்ரூட் நகர வீதிகள் ஊடே ஆயிரக்கணக்கானவர்கள் ஹஸ்புல்லாஹ் கொடியை போர்த்திய கன்தாரின் சவப்பெட்டியை எடுத்துச் சென்றனர்.

இறுதிக் கிரியையில் உரையாற்றிய சபித்தீன், இஸ்ரேல் மீது பழி தீர்க்கப்படும் என்று உறுதி அளித்தார். 


5 comments:

  1. இவ்வாறு தனது ஒவ்வொரு தலபதிகள் கொள்ளப்படும் போது இந்த ஆளு கூறினார் இது வரை அப்படி நடக்கல்ல

    ReplyDelete
  2. They not hisbullah they are hisbullath..

    ReplyDelete
  3. கூடவே இருந்து காட்டிக்கொடுத்தது யாரு அதுவும் ஹிஸ்புல்லாதானே...?

    ReplyDelete
  4. ஹிஸ்புல்லாஹ் வாழ்க.உலகிலேயே இஸ்ரேலின் அமைதியான நித்திரையை நிலை குலையச் செய்த ஒரேயொரு இயக்கம்

    ReplyDelete
  5. Hisbulla is not a Muslim movement. Rather, it belongs to the cursed " Shiya"

    ReplyDelete

Powered by Blogger.