சவூதி அரேபியாவும், ஐக்கிய அரபு அமீரகமும் முக்கிய இராணுவ தளபதிகளை இழந்தது
யேமனில் ஹூதி கிளர்ச்சியாளர்களுடனான சண்டையில் சவூதி அரேபியா ராணுவப் பிரிவுத் தளபதியும், ஐக்கிய அரபு அமீரக ராணுவ உயரதிகாரியும் உயிரிழந்ததாக சவூதி கூட்டுப் படை தெரிவித்தது.
இதுகுறித்து சவூதி கூட்டுப் படை திங்கள்கிழமை (14) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
யேமனின் தாயெஸ் பகுதியை கிளர்ச்சியாளர்களிடமிருந்து மீட்க கூட்டுப் படை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இந்த நடவடிக்கையை மேற்பார்வையிடும் பணியின்போது, சவூதி ராணுவப் பிரிவுத் தளபதி அப்துல்லா அல்-சஹ்யானும், ஐக்கிய அரபு அமீரக ராணுவ உயரதிகாரி சுல்தான் அல்-கித்பியும் உயிரிழந்தனர்.
கிளர்ச்சியாளர்கள் நிகழ்த்திய ஏவுகணைத் தாக்குதலில் அவர்கள் இருவரும் உயிரிழந்தனர் என்று அந்த அறிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யேமன் சண்டையில் இதுவரை 80 சவூதி அரேபிய ராணுவத்தினரும், 70 ஐக்கிய அரபு அமீரகப் படையினரும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment