Header Ads



இனவாத சண்டியர்கள், முஜிபுர் ரஹ்மானை இலக்கு வைத்துள்ளார்கள்..!

-Mohamed Naushad-

பாராளுமன்றத்தில் இன்று 11-12.2015 பாரதூரமான ஒரு சம்பவம் இடம்பெற்றுள்ளது. கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் மீது மகிந்த தரப்பு உறுப்பினர்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த சம்பவத்தின் பின் மகிந்த தரப்பு கோரிக்கையும் சபாநாயகரால் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

நல்லாட்சி யின் கீழ் மக்கள் பிரதிநிதி ஒருவருக்கு மக்கள் அவைக்குள்ளேயே பாதுகாப்பற்ற பரிதாப நிலை. இது ஆரோக்கியமானதல்ல. 

புதிய பாராளுமன்றத்தில் மகிந்த தரப்பு கள்வர் கூட்டத்தின் அட்டகாசம் தொடருகின்றது. முஜிப் பாராளுமன்ற அமர்வுகளுக்கு தலைமை தாங்கும் குழுவிலும் இருப்பதால் அவர் மீது மகிந்த தரப்பு இனவாதிகள் காழ்ப்புனர்வுடன் நடந்து கொள்வதையும் அண்மைக் காலங்களில் அவதானிக்க முடிகின்றது. 

குறிப்பாக முஜிப் அவைக்கு தலைமை தாங்கும் போது திணேஷ் குணவர்தணவும் அவரின் சகாக்களும் நடந்து கொள்ளும் விதம் அவதானிக்கத்தக்கது. 

முஜிப் கொழும்பு மாவட்ட மக்களின் பேராதரவைப் பெற்றவர். கொழும்பு மாவட்ட முஸ்லிம்களின் கல்வி முன்னேற்றத்துக்காக தூர நோக்குடன் அவர் பல செயற் திட்டங்களை தொடங்கியுள்ளார். அண்மையில் ஒரு வைபவத்தில் அவரை சந்தித்த போது தனது திட்டத்தை என்னிடம் கூறினார். 

கேற்கவே மகிழ்ச்சியாக இருந்தது. இத்தகைய தூர நோக்குடன் செயற்படும் அரசியல் வாதிகள் நமது சமூகத்தில் இல்லாத நிலையில் இருக்கின்ற ஒருவரை ஆதரித்து காப்பாற்ற வேண்டியது எமது கடமையாகும். 

அதிலும் கொழும்பு மாவட்ட முஸ்லிம்களுக்கு இந்த விடயத்தில் அளப்பரிய பொறுப்புள்ளது. முஜிப்புக்காக இறைவனிடம் இரு கரம் ஏந்துவோம். பாராளுமன்ற இனவாத சண்டியர்களுக்கு எதிராக பாராளுமன்றத்துக்கு வெளியே ஜனநாயக ரீதியாக ஒன்று திரண்டு எமது எதிர்ப்பை வெளிக்காட்டுவோம்.

3 comments:

  1. Please grant the final judgement for Thajudeen mador without talking and delaying. ..

    Both UPFA and UNP playing a cheating game towards Public and Government Servants

    ReplyDelete
  2. குட்ட குட்ட குனிந்தால் இந்த நாட்டில் நமக்கு இருப்பில்லாமல் போய்விடும். தலைமைகள் தைரியத்தோடு களம் இறங்கினால் பின்னால் 1000 இளைஞர்கள் எங்கள்இ உரிமைகளுக்காக உயிரை கொடுத்து போராடவும் தயாராக உள்ளனர்

    ReplyDelete
  3. Mr Kabeer this is matter for courts to make decision.Not parliament. Court has its own way . They are doing it

    ReplyDelete

Powered by Blogger.