தற்கொலை செய்ய முயன்றவரை தடுத்திநிறுத்தி, ஆறுதல்கூறிய துருக்கி ஜனாதிபதி (படங்கள்)
துருக்கியில் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துகொள்ள முயன்ற நபரை அந்நாட்டு ஜனாதிபதி தடுத்தி நிறுத்தி ஆறுதல் கூறிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
துருக்கியின் போஸ்போரஸ் ஜலசந்தியின் மேல் போஸ்போராஸ் பாலம் அமைந்துள்ளது.
சுமார் 211 அடி உயரம் உள்ள இந்த பாலம் ஆசியா மற்றும் ஐரோப்பாவை இணைக்கும் பாலமாக உள்ளது.
இந்நிலையில் கடந்த 25ஆம் திகதி நபர் ஒருவர் பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்ய முயன்றுள்ளார்.
இதையடுத்து பொலிசார் அவரை காப்பாற்றும் முயற்சியில் இறங்கினர். தற்கொலை செய்துகொள்ளாமல் இருக்கும் வகையில் அவரிடம் பேச்சுக்கொடுத்துள்ளனர்.
அப்போது துருக்கியின் ஜனாதிபதியான ரெசெப் எர்டோகன் (Recep Erdogan). தனது காரில் வந்துள்ளார். இச்சம்பவத்தை கேள்வி பட்ட ஜனாதிபதி அந்த நபரை அழைத்து வருமாறு தனது பாதுகாப்பு அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து காவலாளிகள் அந்த நபரை ஜனாதிபதியிடம் அழைத்து சென்றுள்ளனர்.
ஜனாதிபதியை பார்த்த அந்த நபர் இன்ப அதிர்ச்சியடைந்தார். மேலும் அவரது கரங்களை பற்றிக்கொண்டு முத்தம் கொடுத்துள்ளார்.
அவரிடம் பேசிய எர்டோகன் தற்கொலை செய்யக்கூடாது என்று அறிவுரை கூறியுள்ளார். பின்னர் அங்கிருந்து சென்று விட்டதாக கூறப்படுகிறது.
தற்கொலை செய்துகொள்ள இருந்த நபரின் விவரங்கள் சரிவர தெரியவில்லை என்றும் அவர் மன அழுத்தத்தின் காரணமாக தற்கொலைக்கு முயன்றுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

Post a Comment