பதவிகளை அள்ளிக்கொடுக்கும் மைத்திரி - சமல் + கீதாவையும் கவனித்தார்
அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களுக்கு நிகரான அதிகாரங்களையும் சிறப்புரிமைகளையும் கொண்ட மாவட்ட அபிவிருத்தி இணைப்புக்குழு தலைவர்களாக முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ச, கீதா குமாரசிங்க உட்பட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அம்பாந்தோட்டை மாவட்ட அபிவிருத்தி இணைப்புக்குழு தலைவராக சமல் ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளதுடன் காலி மாவட்ட அபிவிருத்தி இணைப்புக்குழு தலைவராக கீதா குமாரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கையெழுத்துடன் இந்த நியமனக்கடிதங்கள் நேற்று வெளியிடப்பட்டுள்ளன.
இவர்களை தவிர மகிந்த சமரசிங்க, எஸ்.பி. திஸாநாயக்க, அனுர பிரியதர்ஷன யாப்பா, லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, சுசில் பிரேமஜயந்த, சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே, துமிந்த திஸாநாயக்க, சிறிபால கம்லத் ஆகியோர் முறையே களுத்துறை, கண்டி, குருணாகல், மாத்தறை, கொழும்பு, கம்பஹா, அனுராதபுரம், பொலன்நறுவை மாவட்டங்களின் அபிவிருத்தி இணைப்புக்குழுக்களின் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் நியமிக்கப்பட்டுள்ளனர். இரண்டு தலைவர்களை கொண்ட மாவட்ட அபிவிருத்திக்குழுக்களில் ஒரு பதவி ஐக்கிய தேசியக் கட்சிக்கும் மற்றைய தலைவர் பதவி ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கும் வழங்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் சகல அபிவிருத்திப் பணிகளும் இந்த மாவட்ட அபிவிருத்தி இணைப்புக்குழுவின் ஊடாகவே முன்னெடுக்கப்படும் என கூறப்படுகிறது.
Post a Comment