Header Ads



பிரித்தானியாவில் முஸ்லிம் என்பதால்...?

பிரித்தானியாவில் முஸ்லிம் என்பதால் நபர் ஒருவர் பேருந்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சொமாலியா நாட்டை சேர்ந்தவரான இப்ராகிம் இஸ்மாயில்(41) குடியுரிமை பெற்று கடந்த 2000 ஆண்டு முதல் பிரித்தானியாவில் வசித்து வருகிறார்.

இவர் அங்குள்ள திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். இந்நிலையில் கண் பரிசோதனை செய்துகொள்வதற்காக அவர் லண்டன் செல்ல முடிவு செய்துள்ளார்.

எனவே பிரிஸ்டொலில் நேசனல் எக்ஸ்பிரஸ் பேருந்தில் தனது உடமைகளுடன் அவர் ஏறியுள்ளார். அப்போது, அவரின் தோற்றத்தை பார்த்த மாணவி ஒருவர் அசவுகரியமாக உணர்ந்துள்ளார்.

மேலும் அவரை பேருந்தில் இருந்து இறக்கி விடுமாறு ஓட்டுனாரிடம் புகார் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர் பேருந்தில் இருந்து இறங்க கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார்.

இதனால் அவர் மிகவும் ஆத்திரமடைந்துள்ளார்.எனினும் அதை வெளிப்படுத்தாமல் அமைதியாக பேருந்தை விட்டு அவர் கீழே இறங்கியுள்ளார். இது தொடர்பாக இஸ்மாயில் கூறியதாவது, நான் பேருந்தில் ஏறிய போதே அனைவரும் ஒரு மாதிரி பார்த்தனர்

பின்னர் முஸ்லிம் என்ற காரணத்திற்காக என்னைபேருந்தில் இருந்து இறக்கி விட்டனர். அங்கு மேலும் சில கருப்பர்கள் இருந்தனர். எனினும் அவர்களை எதுவும் கூறவில்லை.

இது பாகுபாடு இல்லையா என்று கூறியுள்ளார். இந்நிலையில், அவர் அளவுக்கு அதிகமாக உடமைகளை வைத்திருந்ததால் தான் அவர் பேருந்தில் இருந்து இறக்கிவிடப்பட்டதாக.

நேட்சனல் ஏக்ஸ்பிரஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் மத வேறுபாடு காரணமாகவே அவர் பேருந்தில் இருந்து இறக்கிவிடப்பட்டதாக சக பயணிகள் தெரிவித்துள்ளனர்.



5 comments:

  1. இந்த நபர் கூறியது முற்றிலும் தவறானது நீங்களும் தவறான தலையங்கம் கொடுத்து வெளியிடுகிறீர்கள் வெளி உலகம் தெரியாத இஸ்லாமியர்கள் குரோதம் கொள்வார்கள் இஸ்லாமியர் என்பதற்காக வெளியேற்றப்பட்டார் என்றால் அப்ப இவர் ஒருவர் மாத்திரமா இஸ்லாமியர் வேட்டி கட்டிக்கொண்டு முகத்தில் சந்தனப்பொட்டும் வைத்துக்கொண்டு தோளில் துண்டும் போட்டபடி Srilanka வில் busல் போனால் யாரும் எம்மை வித்தியாசமாக பார்க்கமாட்டார்கள் அப்படியே இங்கும் கடைப்பிடித்தால் வித்தியாசமாகத்தான் தெரியும் அவருடைய தோற்றத்தை பாருங்கள் உங்களுக்கே பயம் வரவில்லையா

    ReplyDelete
  2. இவ்வாறு பல நாடுகளில் முஸ்லிம்களுக்கு சிரமத்தை உண்டு பண்ண வேண்டும் என்ற நோக்கோடுதான் இந்த isis களத்தில் இறங்கியுள்ளது.இது சர்வதேச திட்டமிடப்பட்ட சதிதான் இந்த isis.

    ReplyDelete
    Replies
    1. மன்னிக்கவும் உங்கள் கருத்தில் தலை இடுவதற்கு முஸ்லீம் எனும் காரணத்திற்காக என்று ஏன் என்னவேனும் London இல் எவ்வளவோ இஸ்லாமியர்கள் நல்ல உயர்ந்த வேளைகளில் உள்ளார்கள் மிகவும் மதிக்கத்தக்கவர்களாக உள்ளார்கள் அவருடைய தோற்றத்திற்கு கிடைத்த மரியாதைதான் அது யாழ்பாணத்தில் சரத்தை மடித்து கட்டிக்கொண்டு வித்தியாசமாக நடந்து போவதை கண்டால் ஆட்கள் எதுவும் பேசமாட்டார்கள் ஆனால் நாய் குரைத்துக்கொண்டு துரத்துவது தெரியுமா அது தான் இங்கு நடந்தது என நான் நினைக்கிறேன்

      Delete
    2. நிலவனின் முன்மாதிரியை பின்பற்றுங்கள். ஒருவனை உங்கள் உள்ளத்தால் கூட தாழ்வாக நினைக்க வேண்டாம்.

      Delete
  3. அவருடைய தோற்றமோ, மதமோ, நம்பிக்கையோ, நிறமோ, உடையோ, எதுவாக இருந்தாலும், அது இங்கிலாந்து நாட்டின் சட்டத்தினால் தடை செய்யப்படாத ஒன்றாக இருந்தால், பொது மனித வாழ்க்கைக்கு கெடுதியானதாக அல்லாமல் இருந்தால் ஒருவரை இறக்கிவுடும்படி யாரும் கேட்க முடியாது. குறித்த மாணவிதான் இறங்கி இருக்க வேண்டும், அல்லது ஓட்டுனர் குறித்த மாணவியை வேண்டுமானால் இறங்கிவிடும்படி சொல்லி இருக்க வேண்டும்.

    மாணவி தவறு செய்து இருக்கின்றார், ஓட்டுனர் பெரும் தவறு செய்து இருக்கின்றார். இதுவும் ஒருவகையான "மென் ISIS" மனநிலைதான்.

    ReplyDelete

Powered by Blogger.