மகிந்த - ரணில் சந்திப்பு
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச 04-12-2015 சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் முதல் தடவையாக மஹிந்த, இன்று நாடாளுமன்றில் உரையாற்றினார்.
இந்த உரைக்கு முன்னதாக நாடாளுமன்றில் காணப்படும் பிரதமரின் அலுவலகத்திற்கு சென்று பிரதமரை சந்தித்துள்ளார்.
இந்த சந்தர்ப்பத்தில் பிரதமருடன் அமைச்சர் சாகல ரட்நாயக்கவும் அலுவலத்தில் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
பிரதமரும் முன்னாள் ஜனாதிபதியும் மிகவும் சகஜமாக பேசிக்கொண்டுள்ளனர்.
பகல் உணவையும் உட்கொண்டதன் பின்னரே மஹிந்த பாதுகாப்பு அமைச்சு குழுநிலை விவாதத்தில் உரையாற்றியுள்ளார்.
இதேவேளை, பிரதமரின் அலுவலகத்திற்கு அருகாமையில் ஜனாதிபதியின் அலுவலகம் காணப்பட்ட போதிலும் அந்த அலுவலகத்திற்கு மஹிந்த செல்லவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
Ranil is the israeli supporter..as muslims don't trust this fellow.he is the full supporter of mr and gota.cheater and cunning fox.
ReplyDelete