Header Ads



அதிக மழை, இம்மாதம் முழுவதும் நீடிக்கும்

கடந்த சில நாட்களாக நாட்டில் பெய்துவரும் அதிக மழையுடனான காலநிலை இம்மாதம் முழுவதும் நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

எல் நினோ நிலைமை காரணமாக ஒக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் அதிக மழை வீழ்ச்சி ஏற்படும் என முன்னர் எதிர்வுகூறப்பட்டிருந்த்தாக திணைக்களத்தின் பணிப்பாளர் எஸ்.ஆர். ஜயசேகர குறிப்பிட்டார்.

இம்மாத நடுப்பகுதியிலிருந்து மழை வீழ்ச்சி படிப்படியாக குறைவடைகின்றபோதிலும், மாத இறுதிவரை மழைபெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாக அவர் கூறினார்.

ஆயினும், எல் நினோ நிலைமையின் கீழ், கிழக்கிலிருந்து நாட்டிற்குள் ஊடுருவும் காற்றின் பிரவாகமே அதிக மழைபெய்வதற்கு காரணமாக அமைந்துள்ளதெனவும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் தெரிவித்தார்.

குறிப்பாக வங்காள விரிகுடா ஊடாக பெருமளவு ஈரப்பதன் காற்றின் மூலம் காவிக் கொண்டுவரப்படுவதால் கிழக்கு, வட மத்திய, வடக்கு, ஊவா மாகாணங்களுக்கு அதிக மழை கிட்டுமென அவர் சுட்டிக்காட்டினார்.

சில வேளைகளில் தென் கிழக்கு திசையில் காற்று வீசும்போது ஹம்பாந்தோட்டை பிரதேசத்திற்கும் அதிக மழைவீழ்ச்சி ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் எஸ். ஆர். ஜயசேகர மேலும் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.