தனியார் துறையினருக்கு சம்பள உயர்வு - அமைச்சரவை அங்கீகாரம்
தனியார் துறையினருக்கு சம்பள உயர்வுக்கு அமைச்சர் அங்கீகாரத்தை வழங்கியுள்ளது
2016 வரவு செலவு திட்டத்தில் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு இணங்க தனியார் துறையினருக்கு வேதன உயர்வு குறித்து தயாரிக்கப்பட்ட சட்ட மூலம் தொடர்பில் அனுமதியினை பெற்றுக் கொள்வது சம்பந்தமாக வேலை பார்க்கும் தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர் ரவிந்திர சமரவீரவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதன்படி அடுத்த வருடத்தில் இருந்து தனியார் துறையினருக்கு 2500ரூபா வேதன உயர்வு வழங்க வேண்டும் என்று அமைச்சர் கயந்த கருணாதிலக நேற்று இடம் பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறுவிக்கும் ஊடகவியளார் சந்திப்பின் பேது தெரிவித்தார்.
மற்றும் தனியார் துறையில் பணிபுரியும் சேவையாளர்களின் ஆகக் குறைந்த வேதன தொகை தொடர்பில் சட்டம் ஒன்றிற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
Post a Comment