Header Ads



சிரியாவின் குழுக்கள், சவுதி அரேபியாவில் கூடுகின்றனர்...!

சிரியாவில் மோதல்கள் ஆரம்பித்த நாலரை ஆண்டுகளில் முதல் தடவையாக அந்நாட்டின் அரசாங்க எதிர்ப்பு குழுக்கள் சௌதி அரேபியாவில் கூடுகின்றனர்.

அதிபர் அஸ்ஸத்தை பதவி அகற்றும் நோக்கில் சண்டையிட்டுவரும் பல்வேறு தரப்புகள் இதில் கலந்துகொள்கின்றனர்.

சிரியாவில் அரசாங்கத்துடன் சமாதானப் பேச்சுக்கள் ஆரம்பிக்கும் பட்சத்தில், ஒன்றுசேர்ந்து பேரம் பேசுவதற்கான கூட்டணி ஒன்றை அமைப்பது ரியாத்தில் நடக்கும் இந்தக் கூட்டத்தின் நோக்கமாகும்.

ஃப்ரீ சிரியன் ஆர்மி குழுவில் அமெரிக்காவின் ஆதரவு பெற்ற உட்பிரிவுகளுக்கும், சௌதி அரேபியாவின் ஆதரவைப் பெற்ற சக்திமிக்க இஸ்லாமியவாத குழுக்களுக்கும் வேறு சிலருக்கும் இந்த ரியாத் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

சிரியாவின் குர்த் தரப்பு இக்கூட்டத்துக்கு அழைக்கப்படாத நிலையில், அவர்கள் தனியொரு கூட்டத்தை நடத்துகின்றனர்.

ஐ எஸ் அமைப்பு, அல்கைதாவுடன் தொடர்புடைய நுஸ்ரா முன்னணி போன்றவை இக்கூட்டத்துக்கு அழைக்கப்படவில்லை.

No comments

Powered by Blogger.