கொழும்பு மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளனம், ஞானசாரருக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு
முஸ்லிம்களின் மனதை புண்படுத்தும் விதமாகவும் குர் ஆனை கொச்சைப் படுத்தி இஸ்லாமிய அடிப்படை நம்பிக்கைகளை சிதைக்கும் விதமாகவும் கருத்து வெளியிட்ட பொது பல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக கொம்பனித் தெரு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று அளிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளனத் தலைவர் அஸ்லம் ஒத்மானினால் இந்த முறைப்பாடு நேற்று முன் தினம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த செவ்வாயன்று இடம்பெற்ற பொது பலசேனாவின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கலகொட அத்தே ஞானசார தேரர் வெளியிட்ட கருத்துக்களுக்கு எதிராகவே இந்த முறைப்பாடு அளிக்கப்பட்டதாகவும் ஒவ்வொரு முஸ்லிமும் தத்தமது ஊர் பொலிஸ் நிலையங்களில் ஞானசார தேரரின் குறித்த கருத்துக்களுக்கு எதிராக முறைப்பாடு செய்யுமாறும் கொழும்பு மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளனத் தலைவர் அஸ்லம் கோரிக்கை விடுத்துள்ளார்.
முஸ்லிம்கள் விடயத்தில் மகிந்தவும் ஒன்றுதான், மைத்திரியும் ஒன்றுதான், ரணிலும் ஒன்றுதான் என்பதே இலங்கை வரலாறு....
ReplyDelete"மறுமை" நெருங்கும்போது "இம்மை" எம்மை நெருக்கும் என்பதுதானே நபிகளாரின் வாக்கு!
ஈமானை இழக்காமலும், (தேவைக்கு ஏற்றால்போல்) ஈமானை இலகுவாக்காமலும் உறுதியாய் நிற்போம்... அல்லாஹ்வை அழைப்போம்!
அனைத்து முஸ்லீம் ஊர்களிலிருக்கும் முஸ்லீம் சம்மேளனங்களும் அமைப்புக்களும் பள்ளி வாயல் நிர்வாகிகளும் மக்களும் ஒன்று பட்டு அந்தந்த பகுதியில் காணப்படும் பொலிஸ் நிலையத்தில் பொது பல சேனாவிற்கு எதிரான முறைப்பாட்டை செய்தால்தான் ஏதாவது ஒரு முடிவிற்கு வரும்...
ReplyDelete