உண்ணாவிரதம் இருந்த மக்கள் மீது தாக்குதலை கண்டித்து, மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
கொலன்னாவை, மீதொட்டமுள்ள, கழிவு அகற்றும் இடத்திற்கு எதிராக உண்ணாவிரதம் இருந்த அப்பகுதி மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை கண்டித்து பல்கலைக்கழக மாணவர்கள் அமைதியான ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர்.
ரஜரட்ட பல்கலைக்கழகம் மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர் சங்கங்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.
இன்று பகல் 12 மணிமுதல் 1 மணிவரை இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
கடந்த அரசாங்கம் போன்றே இந்த அரசாங்கமும் மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்காமல் அராஜக செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் லஹிரு வீரசேகர இதன்போது கூறினார்.
தமது கல்விக்காக வரி செலுத்தும் மக்களின் பொதுவான பிரச்சினைகளுக்காக எந்த வேளையில் அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் முன்நிற்பார்கள் என்றும் அவர் கூறினார்.

Post a Comment