பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக, ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் பழிப்பதை ஏற்க முடியாது - மலாலா
பயங்கரவாதத்தை ஒழிக்க முற்படும் ஒருவர் ஒட்டுமொத்த சமுதாயத்தையும் பழிக்க வேண்டாமென நோபல் பரிசு வென்ற மலாலா தெரிவித்துள்ளார்.
நோபல் பரிசு பெற்ற பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா, பிரிட்டனில் நடைபெற்ற இரங்கல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.
இதன்போது, பாகிஸ்தானின் பெஷாவரில் கடந்த ஆண்டு பயங்கரவாதத் தாக்குதலில் சுட்டுக்கொல்லப்பட்ட 150 குழந்தைகளுக்காக மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து அவர் நிகழ்ச்சியில் உரையாற்றிய போது, அமெரிக்காவின் குடியரசுக் கட்சியின் மூத்த தலைவரும் அதிபர் பதவி வேட்பாளருமான டொனால்ட் ட்ரம்ப்பின் கருத்திற்குக் கண்டனம் தெரிவித்தார்.
மலாலா தெரிவித்ததாவது;
உங்களிடமிருந்து இத்தகைய வெறுப்புப் பேச்சு வருவது கவலை அளிக்கிறது. பயங்கரவாதத்தை ஒழிக்க முற்படும் நீங்கள் ஒட்டுமொத்த சமுதாயத்தையும் பழிக்க வேண்டாம். சில குழுக்கள் செய்யும் வேலைகளுக்கு 1.6 பில்லியன் முஸ்லிம் மக்களையும் பழிப்பது ஏற்க முடியாதது. உங்களின் பேச்சை நியாயப்படுத்தவும் முடியாது. அதனால் பலனும் கிடையாது. உங்களது பேச்சால் பயங்கரவாதத்தை ஒழிக்க முடியாது என்றார்.
அமெரிக்காவில் முஸ்லிம் குடியேற்றத்திற்கு முழுமையாக தடை விதிக்க வேண்டும் என்று குடியரசுக் கட்சியின் மூத்த தலைவரும் அதிபர் பதவி வேட்பாளருமான டொனால்ட் ட்ரம்ப் அதிரடியாகக் கூறியிருந்தார்.
இதற்கு சர்வதேச அளவில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.
ஆனால், தீவிரவாத அச்சுறுத்தல் அதிகம் இருக்கும் இந்தக் காலகட்டத்தில் ட்ரம்ப்பின் கருத்து பரிசீலிக்க வேண்டிய ஒன்று என்றும் இதனால் அதிபர் தேர்தலையொட்டி அவர் மீது புதிய நம்பகத்தன்மை ஏற்பட்டிருப்பதாகவும் சிலர் தெரிவித்துள்ளனர்.
ஒரு பதின்வயது மாணவிக்கு புரிவது கூட பெரும் அறிஞர்களெனத் தம்மை முன்னிலைப்படுத்தும் பலருக்குப் புரியவில்லையே..?
ReplyDeleteமெழுகுவர்த்தி ஏஏற்றி அஞ்சலி செலுத்தியுள்ளார் ஜனாபா மலாலா
ReplyDeleteடிஸ்னிலேண்ட் பார்ட்டிகளில் மதுவருந்தி வெள்ளைக்காரிகளுடன் ஆட்டம்போடும் இஸ்லாமிய தேசங்களின் இளவரசர்களே இருக்கும்போது மெழுகுவர்த்தி ஏற்றியது ஒன்றும் பெரிய விடயமே அல்ல.
ReplyDeleteஎன்றோ ஒரு நாள் செய்யப்போகும் தடைக்கு வக்காலத்து வாங்க்ம் மலாலா...தினம்தினம் இஸ்ரேலியர்கள் கொல்லப்படும் பாலஸ்தீன மக்களுக்காக ஒருபோதும் பேசுவது கிடையாது... இந்த மலாலாவே இஸ்ரேலிய கைகூலி என பலமுறை பலர் வாதித்துவிட்டார்கள்
ReplyDelete