Header Ads



வசீம் தாஜுத்தீன் குடும்பத்தினரின் முறைப்பாடு, படுகொலையை மரணம் என திரிபுடுத்தியதாக வேதனை

றக்பி வீரர் வசீம் தாஜுதீன் கொலை தொடர்பாக அவரது குடும்பத்தினர் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிடம் முறையிடவுள்ளனர்.

இந்த கொலை தொடர்பாக தாஜுதீனின் குடும்பத்தின் சார்பில் ஆஜராகவுள்ள சட்டத்தரணிகள் குழு பொலிஸ் ஆணைக்குழு உறுப்பினர்களைச் சந்தித்துப் பேசவுள்ளனர். இவ்வாரம் இந்தச் சந்திப்பு இடம்பெறுமென குடும்ப அங்கத்தவர்கள் தெரிவித்தனர்.

தாஜுதீனின் மரணத்தை விபத்து மரணமென திரிவுபடுத்தியது தொடர்பாக நாரஹென்பிட்டி பொலிஸ் பொறுப்பதிகாரி மற்றும் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸ் அதிகாரிகள் தொடர்பில் பொலிஸ் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்படவுள்ளது.

நாரஹென்பிட்டி பொலிஸ் ஓ.ஐ.சி. விசாரணையைத் திரிபுபடுத்தும் வகையில் செயல்பட்டுள்ளார்.

இதேவேளை, மருத்துவ அறிக்கையின்படி வாகனம் விபத்தில் சிக்கும் போது தாஜுதீனின் உடல் வாகனத்தினுள் இருக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. கார் மோதியதன் பின்பே தாஜுதீனின் உடல் உள்ளே போடப்பட்டுள்ளதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் றக்பி வீரர் வசீம் தாஜுதீனின் தோண்டி எடுக்கப்பட்ட சில எச்சங்கள் காணாமல் போயுள்ளதாக விசாரணைகளை முன்னெடுத்த விசேட மருத்துவ குழு கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸிடம் அறிவித்துள்ளது.

இவ்வாறு தோண்டி எடுக்கப்பட்ட எச்சங்கள் சட்ட வைத்திய அதிகாரியின் அலுவலகத்திலும் இல்லை என அந்த மருத்துவ குழு அறிவித்துள்ளது.

தாஜுதீனின் எச்சங்களை சட்ட வைத்திய அதிகாரியின் அலுவலகத்தில் குளிரூட்டப்பட்ட அறையில் அல்லது குளிரூட்டப்பட்ட பிரேத அறையில் வைக்குமாறு முன்னாள் பிரதம சட்ட வைத்திய அதிகாரி ஆனந்த சமரகேரவினால் ஆலோசனை வழங்கப்பட்டிருந்த போதிலும் அந்த எச்சங்கள் ஒப்படைக்கப்பட்டமைக்கான உரிய சாட்சியங்கள் இல்லை என அந்த குழு நீதிமன்றத்திடம் அறிவித்துள்ளது. 

No comments

Powered by Blogger.