Header Ads



ஹிருனிகா விவகாரம், புகுந்து விளையாடும் "ஹிரு"


(Hiru News)

ஹிருனிகா பிரேமசந்திரவின் பாதுகாவலர்களால், அவரது டிபெண்டர் வானத்தில் நபர் ஒருவரை கடத்திச் சென்று, தாக்கி, அச்சுறுத்தியமை தொடர்பில் பல்வேறு தரப்பில் கண்டனங்கள் தெரிவிக்கப்படுகின்றன.

இவ்வாறான சம்பவங்கள் நல்லாட்சியின் கீழ் இடம்பெறக்கூடாது என்று, நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, ஹிருனிகா பிரேமசந்திரவின் இந்த செயற்பாடு தொடர்பில், அரசாங்கம் உரிய வகையில் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று, ஜே வி பி வலியுறுத்தியுள்ளது.

அதன் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் இதனை கொழும்பில் ஊடக சந்திப்பு ஒன்றை நடத்தி தெரிவித்துள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணியின் ஊடக பேச்சாளர் விஜித ஹேரத் இவ்வாறு தெரிவித்திருந்தார்.....

'அன்று வெள்ளை வேன்களில் கடத்தப்பட்ட முறை , இன்று கருப்பு டிபண்டரில் கடத்தப்படுகின்றது.வெள்ளை வேன்களுக்கு பதிலாக கருப்பு டிபெண்டரை யாரும் கேட்கவில்லை .பாராளுமன்ற உறுப்பினர் என்ற பெயரை அல்லது வேறு சக்திகளை கொண்டு யாராவது கருப்பு டிபெண்டகளின் சாதாரண இளைஞர்களை கடத்தி செல்வது முற்றிலும் தவறான செயற்பாடாகும்.

இது ராஜபக்ஷ ஆட்சியில் ஆரம்பிக்கப்பட்டது. இதிலிருந்துதான் ஹிருனிகா பிரேமசந்திர அவற்றை கற்றுக்கொண்டுள்ளார்.இதிலிருந்து மாற்றம் ஒன்று ஏற்படவில்லை என நிரூபிக்கப்பட்டுள்ளது.இது நல்லாட்சி இல்லை மீண்டும் மோசமான ஆட்சியாக மாறியுள்ளது.இது தொடர்பாக அரசு விரைவான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்'என அவர் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையில், இவ்வாறான முக்கிய குற்றச்சாட்டு காணப்படுகின்ற போதும், ஹிருனிகா பிரேமசந்திர இன்னும் கைது செய்யப்படாமல் இருக்கின்றமை சிக்கலுக்குரிய கேள்வி என்று, பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

 குற்றவியல் சட்டத்தின் கீழ் ஒருவரை கடத்த ஆதரவு வழங்குகின்றமை மற்றும் கடத்தியவரை அச்சுறுத்துகின்றமை தவறு இல்லையா? என இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரான பிரதீபா மஹானாஹேவாவிடம் hiru  செய்தி சேவை வினவியது.

அதற்கு பதிலளித்த அவர், "குற்றவியல் சட்டத்தின் 353 சரத்திற்கமைய, எவரேனும் ஒரு இடத்தில் இருந்து இன்னுமொரு இடத்திற்கு பலவந்தமாக அழைத்து செல்லப்படுதல், அல்லது அதிகாரத்தை முறையற்ற வகையில் பயன்படுத்தி அழைத்து செல்லும் செயற்பாடானது கடத்தலாகவே கருதப்படும்.

அவ்வாறான சந்தர்பத்தில் எவரேனும் இந்த குற்றத்திற்கு ஆதரவு வழங்குவாரயின் அவரும் தவறிழைத்தவராகவே கருதப்படுவார்.
இதற்காக 7 வருட சிறை தண்டனை வழங்க முடியும். அதுமாத்திரமின்றி கடத்திச் செல்லப்பட்டு அச்சுறுத்தல் மற்றும் தாக்குதல் நடத்தப்படுமாயின் அந்த தண்டனையானது அதிகரிக்கப்படும்" என்றார்.

2 comments:

  1. All BLACK DEFENDER and WHITE VAN individuals should be brought in front of public. arresting Black defender personal/s should be done but before that arresting white van personal/s should be done.. why not Kaman does not raise white van issue ?

    ReplyDelete
  2. Nanga mathiram seyvoom ninga eppdi seyveergal kadthal I am mr

    ReplyDelete

Powered by Blogger.