Header Ads



கட்டுநாயக்காவில் தங்கக் கடத்தலில் ஈடுபட்டவர், எனது செயலாளர் அல்ல - அமைச்சர் ஹலீம்

(JM.HAFEEZ)

கட்டுநாயக்காவில் தங்கக் கடத்தலில் ஈடுபட்டவர் தனது செயலாளர் அல்ல வென்று அந்த நபர் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று இது தொடாபாக விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவருக்கு உரிய தண்டனை பெற்றுக் கொடுக்கும்படியும் முஸ்லிம் சமய விவகார, தபால்துறை அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் கண்டியில் வைத்துத் தெரிவித்தார்.

விசேட ஊடக சந்திப்பு ஒன்றை நடத்திய அவர் இது தொடர்பாக மேலும் தெரிவித்ததாவது,

தனது அமைச்சில் அப்படி ஒரு இணைப்புச் செயலாளர்  இல்லை என்றும் அந்த நபரைப் பற்றி தான் ஏதும் அறிந்திருக்கவும் இல்லை. எனது அதிகாரிகள் இணைப்புச் செயலாளர்கள் அனைவருமே இந்நாட்களில் கண்டியில் இடம் பெறவுள்ள தேசிய மீலாத் விழாவிற்கான ஏற்பாடுகளைக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். அதேநேரம் எமது அமைச்சின் ஊழியர்கள் எவரும் வெளிநாடு அனுப்பி வைக்கப்பட வில்லை என்றும் கூறினார்.

 தான் நீண்டகாலமாக நேர்மையான அரசியல் செய்து வருவதாகவும் தனது மாமானார் காலம் சென்ற ஏ.சீ.எஸ்.    ஹமீத் உற்பட தாம் அவ்வாறு எப்போதும் ஊழல் மோசடியில் ஈடுபட்டு அரசியல் செய்வில்லை என்றும் தெரிவித்தார்.

மேற்படி விடயம் தொடர்பாக ஊடகங்கங்கள் வெளியிட்ட செய்தியால் தானும் தனது குடும்பமும் ஆழ்ந்த கவலையில் இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தற்போது நல்லாட்சி இடம் பெற்று வருகிறது. இப்படியான நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு என்ன செய்ய வேண்டும் என்பது சட்டத்தில் உள்ளது. நான் எந்த வகையிலும் இது விடயமாக தலையிடுகள் செய்யப் போவதில்லை. உரியவர்களுக்கு  உரிய தன்டனையை பெற்றுக் கொடுக்கவோ சட்ட நடவடிக்கை எடுக்க எந்தத் தடையுமில்லை என அவர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.