Header Ads



பொத்துவில் வைத்தியசாலை, மக்களை சாகடிக்கிறதா..?

-மக்சூத் முஹம்மட் றம்சான்-

பொத்துவில் வைத்தியசாலையில் நோயளர்களை பார்க்க வேண்டிய வைத்தியர்களோ தங்களது கடமைகளை சரிவர கவனிப்பதில்லை என்ற குற்றம் அடிக்கடி பொதுமக்களால் சுட்டிக்கட்ட பட்ட போதும் ஏதோ ஒரு வகையில் பொத்துவில் மக்களை குற்றமாக்கி பொலிஸிற்கும் கொண்டு சென்ற மனிதாபிமானம் அற்ற செயற்பாடுகள் நிறையவே இருக்கின்றது. 

இதற்கு வலு சேர்க்கும் வகையில் கடந்த அன்று 09.11.2015 வைத்தியசாலையில் ஏற்ப்ட்ட அம்புயுலன்ஸ் இருந்தும் சாரதி இல்லா பிரச்சினை கூறூவதோடு நீதி கேட்டுச்சென்ற பொத்துவில் பொதுமகன் ஒருவனை சட்ட நடவடிக்கை எடுத்ததையும் கூறலாம்

இதன் தொடர்ச்சியாக நேற்று ( 06.12.2015) வைத்தியசாலையில் கடமைபுரியும்
ஊழியர் ஒருவரின் மகன் அவசர சிகிச்சைக்காக கொண்டு சென்றும் சுமார் 1.30
மணி நேரம் எவ்வித முதலுதவியும் இன்றி தாமதிக்க வைத்ததோடு வைத்தியருமின்றி அசமந்த தனமான போக்கையும் பொத்துவில் வைத்தியசாலையும் அதன் நிருவாகமும் கொன்டு சென்றது.

ஆனால்  தீர்வை நீக்கிய வாகன‌ம் மேலதிக கொடுப்பனவுகளை கோரி வேலை
நிறுத்தங்களை மேற்கொள்ளும் வைத்தியர்கள்  மக்களை சாவடிக்கும் பொத்துவில் வைத்தியசாலையின் நிருவாக குறைபாட்டை ஏனோ  கண்டு கொள்ளாமல் இருக்கின்றனர்.

இனிமேலாவாது பொத்துவில் மக்களின் வைத்தியசாலை பிரச்சினைகளை
அரசியல் வாதிகள் தீர்த்து வைப்பார்களா? என்பதோடு  பாதிக்கப்பட்ட சிறுவனின் தந்தையின் அவலக் குரலையும் உங்கள் பார்வைக்காக இனைத்து
இருக்கின்றோம்.

No comments

Powered by Blogger.