கிருணிக்கா தொடர்பில், ஆராயவில்லை - கபீர் காசிம்
நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திரவின் செயற்பாடு மற்றும் அது தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து விடுமுறையின் பின்னர் ஆராயப்படும் என்று ஐக்கிய தேசியக்கட்சி அறிவித்துள்ளது.
கடந்த வாரத்தில் தெமட்டகொடையில் இளைஞர் ஒருவரை மெய்பாதுகாவலர்கள் கடத்திய குற்றச்சாட்டு தொடர்பில் ஹிருணிகா மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இந்த கடத்தல் ஹிருணிகாவின் வாகனத்திலேயே இடம்பெற்றுள்ளது.
இந்தநிலையில் கட்சி இன்னும் இந்த விடயம் தொடர்பில் கூடி ஆராயவில்லை என்று கட்சியின் செயலாளர் கபீர் காசிம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை விசாரணைகள் தொடர்வதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
Post a Comment