Header Ads



அமெரிக்க முஸ்லிம்களின் அன்றாட வாழ்க்கையில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாம்..!

அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நடக்கக்கூடிய அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் வேட்பாளராக ஆவதற்காக போட்டியிடுபவர்கள், தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கலந்துகொண்டு, வெளியுறவுக் கொள்கையிலும், தேசிய பாதுகாப்பு விஷயங்களிலும் தங்களுடைய நிலைப்பாடு மற்றும் திட்டங்கள் பற்றி வாதிட்டுள்ளனர்.

இப்போட்டியில் தற்போது முன்னிலை வகிக்கும் டோனல்ட் டிரம்ப், முஸ்லிம்கள் அமெரிக்காவுக்கு வருவதை தடைசெய்ய வேண்டும் என்ற தனது வாதம் சரியென்று வாதிட்டார். அது பாதுகாப்பு சார்ந்த வாதம் மதம் சார்ந்த வாதம் அல்ல என்றும் அவர் கூறினார்.

அமெரிக்க வாழ் முஸ்லிம்கள் இந்த விவாதத்தை உன்னிப்பாக கவனித்துள்ளனர். டிரம்பின் சில வாதங்களால் அமெரிக்காவில் முஸ்லிம்கள் சிலருடைய அன்றாட வாழ்க்கையில் சிரமங்கள் எழுந்துள்ளதாகத் தெரிகிறது.

1 comment:

  1. எல்லா அரபு நாடுகளும் அமெரிக்கரகளை தடை செய்தால் எப்படியிருப்பும்?

    #Dump the trump

    ReplyDelete

Powered by Blogger.