Header Ads



பார்தி எயார்டெல்லை, கொள்வனவு செய்யுமா டயலொக்..?

இலங்கையின் பாரிய கைத்தொலைபேசி நிறுவனமான டயலொக் நிறுவனம், பார்தி எயார்டெல் நிறுவனத்தின் கொழும்பு நடவடிக்கைகளை கொள்வனவு செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொழும்பின் இணையத்தளம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

சுமார் 100மில்லியன் டொலர்களுக்கு இந்த கொள்வனவு இடம்பெறுவதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன.

குறித்த பரிமாற்றம், பணம் மற்றும் பங்குகளை மையமாக கொண்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த செய்தி குறித்த பார்தி எயார்டெல் நிறுவனமோ அல்லது டயலொக் எலெக்ஸ்டா நிறுவனமோ எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை.

ஏற்கனவே இலங்கை மற்றும் பங்களாதேஸில் உள்ள தமது 6500 தொலைத்தொடர்பு கோபுரங்களை விற்பனை செய்ய பார்தி எயார்டெல் எதிர்பார்க்கிறது என்று இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தமையையும் கொழும்பு ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

1 comment:

  1. We want to reject the dialog network. Because, they hidden all evidence in Siyam's court case. They tried to protect the criminal via that

    ReplyDelete

Powered by Blogger.