சவூதி அரேபியாவிடம் அவசர, உதவி கேட்கிறது இலங்கை
இலங்கையில் எரிப்பொருள் சுத்திகரிப்பு நிலையமொன்றை ஸ்தாபிப்பதற்கு முன்வருமாறு இலங்கை அரசாங்கம் சவுதி அரேபியாவிடம் கோரிக்கை முன்வைத்துள்ளது.
சவுதி அரேபியாவிற்கான உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள இலங்கை மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுண் மஹேந்திரனிற்கும், அந்த நாட்டு நிதி நிறுவன முக்கியஸ்தர்களுக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது அந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை அண்மித்த பகுதியில் இந்த எரிப்பொருள் சுத்திகரிப்பு நிலையத்தை ஸ்தாபிக்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை, பிரதான விநியோக மத்திய நிலையமாக மாற்றும் நோக்கிலேயே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மத்திய வங்கி ஆளுநருடன், இலங்கையிலுள்ள அரச மற்றும் தனியார் வங்கிகளின் பிரதானிகளும் இந்த விஜயத்தில் ஈடுபட்டுள்ளதுடன், இலங்கை எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டு வருகின்றது.
சவுதி அரேபியா பொருளாதார ஒத்துழைப்புக்களை வழங்கும் நாடககும்.
550000 இலங்கையர்கள் சவுதி அரேபியாவில் பணிபுரிந்து வருவதுடன், அவர்களினால் இலங்கைக்கு வருடாந்தம் 10 பில்லியன் ரூபா கிடைக்கின்றது.
அதேபோன்று வருடாந்தம் 800 பில்லியன் டொலர் பெறுமதியாக தேயிலை சவுதி அரேபியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment