Header Ads



"சவுதி அரேபியாவிற்கு பெண்களை அனுப்புவதை, நிறுத்துவது தொடர்பில் தீர்மானிக்கவில்லை"

சவுதி அரேபியாவிற்கு வீட்டுப் பணிப்பெண்களை அனுப்புவதை நிறுத்துவது தொடர்பில் இன்னமும் தீர்மானிக்கவில்லை. வெளிநாடு செல்லும் பெண்களும் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் புத்திக்க பத்திரன இன்று பாராளுமன்றில் கேட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

வெளிநாட்டுக்கு செல்லும் பெண்களின் பாதிகாப்புக்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. வெளிநாடு செல்லும் பெண்கள் தொடர்பில் தொடர்ச்சியாக தேடிப்பார்க்கிறோம்.

பயிற்சிகள் வழங்கி, பாதுகாப்பு தொடர்பில் கவனம் செலுத்துகிறோம். பாதுகாப்புக்கான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதற்கு தேவையான நிதியை தூதரகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

பாலியல் துஷ்பிரயோகங்கள் அல்லது ஆணியடித்தல் போன்றவை பற்றி எவரும் சரியாக முறைப்பாடு செய்வதில்லை.

அவ்வாறு முறைப்பாடு செய்யப்பட்டால் நடவடிக்கை எடுக்க முடியும். நாட்டின் பொருளாதார நிலை காரணமாகவே அதிக எண்ணிக்கையான பெண்கள் வெளிநாடுகளுக்கு செல்கின்றனர்.

2 comments:

  1. இதை விட்டால் வேறு வருமானம் வேண்டுமே

    ReplyDelete
  2. சஊதிக்கு அனுப்பாமல் மாற்று வழியை சஊதியை வஹபிகள் என்று ஊழயிடும் நம்முடைய கபுறு வணங்கிகளிடம் கேட்டால் நல்ல ஐடியா சொல்லமாட்டார்களி?

    ReplyDelete

Powered by Blogger.