Header Ads



முஸ்லிம் முதியவரின் வீட்டிலிருந்தது மாட்டிறைச்சி அல்ல, ஆட்டிறைச்சியே - வெளியாகியது உண்மை


மாட்டிறைச்சி வைத்திருந்ததாக அக்லாக் என்ற முதியவரை கொன்றது ஞாபகம் இருக்கலாம். தற்போது அந்த இறைச்சி சோதனை செய்து ரிபோர்டும் வந்துள்ளது. அக்லாக் வீட்டில் இருந்தது ஆட்டிறைச்சியாம். குர்பானி இறைச்சியை ஒரு வாரம் வரை கூட குளிர்சாதனபெட்டியில் வைத்து பயன்படுத்துவது இஸ்லாமியரின் வழக்கம். 

இந்த கொலையில் தொடர்புடைய 15 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. விஷால் ராணா, சிவம், பிஜேபி தலைவர் சஞ்சய் ரானா போன்றோரும் இதில் அடங்குவர். அந்த முதியரின் உயிர் இனி திரும்ப வருமா? இந்த கொலையை செய்த நாய்களை நடு ரோட்டில் நிறுத்தி வைத்து கல்லால் அடித்து கொன்றால் தான் இனி இது போன்ற செயல்கள் நடக்காது. அகிலேஷ் அரசு என்ன செய்கிறது என்று பொறுத்திருந்து பார்போம்.

இந்துத்வாவாதிகளின் தலையீட்டால் ஒருகால் இவர்கள் விடுதலையாகலாம். ஆனால் மறுமை என்ற ஒரு வாழ்வில் பல முறை உயிர் கொடுக்கப்பட்டு இந்த கொடியவர்கள் அதை விட அதிக வலியை உணருவார்கள். அந்த நாளுக்காக நாமும் பொறுத்திருப்போம்.

தகவல் உதவி
ஹந்து ஆங்கில நாளிதழ்
28-12-2015

2 comments:

  1. அப்படிஎன்றால்....? என்ன சொல்ல வருகின்றார்கள்?
    மாட்டு இறைச்சி ஒருவன் சாப்பிட்டால் கொல்லலாமா?
    மாட்டு இறைச்சி மட்டுமல்ல எந்தவொரு இறைச்சியையும் / உணவையும் உண்ணுவதற்கு ஒவ்வொருவருக்கும் உரிமை இருக்கு.
    ஒரு பேச்சுக்கு ஏன் மாட்டிறைச்சி சாப்பிடுறீங்க என்று வாயால் கேட்க்கக்கூட மற்றவனுக்கு உரிமை இல்லை.
    இந்தக்கொலையை செய்த இந்துத் தீவிரவாதிகளுக்கு உயர்ந்த பட்ச தண்டனை வழங்கப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டும்.
    மற்றவன் என்ன சாப்பிட்டால் இவங்களுக்கு என்ன செய்கின்றது?
    நான் இந்துவாக இருந்தாலும் முஸ்லீம் மற்றும் கிறிஸ்தவ நண்பர்கள் மாட்டிறைச்சி சாப்பிடும் போது ஒரே மேசையில் நான் மரக்கறி சாப்பிட்டு இருக்கிறேன். ஒவ்வொருவரும் என்ன சாப்பிடுகின்றார்கள் என்பதை அவரவர் பின்னணியில் இருந்து பார்க்க வேண்டும்.

    ReplyDelete
  2. Sajanthan நீங்கள் சொல்வதுபோல் இஸலாமும் பன்றி இறைச்சி சாப்பிடுகிறவர்களை கொல்லச்சொல்லியோ அல்லது அவர்களுக்கு தன்டனை வழங்கச்சொல்லியோ இல்லை.
    ஆனால் எனக்குத்தெரிந்தவரைக்கும் இறைச்சி சாப்பிட்டால் அல்லது அதை வைத்திருந்தால் தன்டனை என்று இந்தியாதான் முதல் முறையாக சட்டம் ஒன்றை கொண்டுவந்துள்ளது.
    மேலே உள்ள செய்தி " The Hindu" ஆங்கிலப்பதிப்பில் இருந்து மொழியாக்கம் செய்யப்பட்டதாம்!

    ReplyDelete

Powered by Blogger.