Header Ads



"குர்ஆன் மீது சத்தியம் செய்யக் கோரும்படி, தேரருக்குச் சொல்லிக்கொடுத்த பன்னாடை"

-Ashroff Shihabdeen-

ஹிரு தொலைக்காட்சியில் நடந்த விவாதம் எப்படி நடந்து முடிந்தது என்பது அறிவுள்ள அனைவருக்கும் தெளிவாகப் புரிந்துதான் இருக்கும்.

ஒரு பொய்யைத் திரும்பத் திரும்பச் சொல்லிக் கணங்களை வென்று சென்றாலும் கூட உண்மை உள்ளே கிடந்து துடிக்கத்தான் செய்யும். அதுவே பிழைகளின் மீது பிழைப்பு நடத்துவோரைப் பிறழ் நடத்தைக்குத் தள்ளிவிடும்.

அந்த அடிப்படையில் அமைச்சர் ரிஷாத் குர்ஆன் மீது சத்தியம் செய்ய மறுத்தார் என்று சொல்லி மனதைத் தேற்றிக் கொள்ளவும் அதையே ஒரு குற்றச் சாட்டாக எடுத்து வைத்துத் தகவல் பரப்பவும் முனைந்திருக்கிறார்கள்.

குர்ஆன் மீது சத்தியம் செய்யக் கோரும்படி தேரருக்குச் சொல்லிக் கொடுத்த பன்னாடைக்கு இஸ்லாமிய வழிமுறை தெரியவில்லை. அல்லாஹ் ஒருவன் மீதே சத்தியம் செய்ய முடியும். இதில் வேடிக்கை என்னவெனில் எதிர் அரசியல் முஸல்மான்களும் “குர்ஆனில் சத்தியம்” செய்யாததை அமைச்சரின் தோல்வியாகச் சித்தரிக்க முனைவதுதான்.

தேரரும் அமைச்சரும் அங்கு விவாதம் செய்ய வந்தார்களே தவிர, சத்தியம் செய்ய வரவில்லை. சத்தியம் செய்வதானால் தான் சொன்னவை யாவும் சரியானவை என்று தேரரும் சத்தியம் செய்திருக்க வேண்டும். ஆனால் அதைப் பற்றி யாரும் பேசுவதாகத் தெரியவில்லை.

நிகழ்ச்சியையும் சத்தியம் செய்வதற்கான நிகழ்ச்சியாக அறிவித்திருந்தால் மணித்தியாலக் கணக்கில் அமர்ந்து வாதம் செய்திருக்கத் தேவையில்லை. நிகழ்ச்சியும் 10 நிமிடங்களில் முடிந்திருக்கும்!

6 comments:

  1. கட்டுரையாலரே குர்ஆன்மீதோ அல்லாஹ்வின் மீதோ சத்தியம் செய்வது ஒருபுரம் இருக்கட்டும் இதைதூக்கிபிடிப்பவன் ஒருபன்னாடையென தெரிந்தும் எதற்காக ரிசாட்சேர் அவனுடன் விவாதிக்கஉடன் படவேன்டும் சாதாரனமாக திருட்டுபட்டம் சுமத்துபவன் நான் திருடவேஇல்லையென்றாள் வேருவழியின்ரி சத்தியம் செய் என்பான் இதுநமது சமூகத்துக்குல்லும் நடக்கின்ரவிடையம்தானே ஆக ஆருகடக்கமுயலும் போது சீலைநனையுதே எனபார்த்தால் கடக்கமுடியுமா?எனது கருத்து இவனைப்போல் இன்னும்பலரும் வந்துவம்புக்கும் வாதத்திற்கும் இழுக்கலாம் இனிமேலாவது இதைவேருவிதமாக கையாலவேன்டுமென்பதே

    ReplyDelete
  2. இல்லாத கிணற்றை இருக்கு இருக்கு என்பது ஒரு பக்கம். நான் கட்டினேன் என்பது ஒரு பக்கம். அதை கண்டுபிடித்து தா என்பது மறு பக்கம். கேக்குறவன் கேனையனா இருந்தா எருமை ஏரப்பிளான பிளானா ஓட்டும் என்பானுங்க.

    ReplyDelete
  3. இங்கு சென்றது விவாதத்திற்கு சத்தியம் செய்வதற்கல்ல இதை ஒரு குறையாக பயன்படூுத்தி அரசியல் இலாபம் தேடும் மானங்கெட்ட அரசியல்வாதிகள் இது அவர்கள் தேர்தல் காலங்களில் வாக்கு பிச்சை கேட்பீர்களே அந்த பாமர அகதிகளின் பிரச்சினை்.இதை யாரும் இழிவாக கருத வேண்டாம் நம்மீது இவர்கள் காட்டும் காழ்ப்புணர்ச்சி எவ்வளவு தூரம் வளர்ந்துள்ளது என்பதை வர்த்தமானி அறிவித்தல்கள் வெளியிட்ட ஆண்டுகளை நோக்கும்போது நனறாக புரிகின்றது திட்டமிடப்பட்ட சதி மிகத்துல்லியமாக இடம்பெற்றுள்ளது.இன்னுமின்னும் நம்சமுதாய தலைவர்கள் ஒன்றுபடாமல் இருந்தால் சமுகத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும்

    ReplyDelete
  4. Why not involve that our other muslima politicians?
    Are Still sleeping? Mr.Rishadh badurdeen your are yhegreat president for our community.

    ReplyDelete
  5. சகோதரர்களே அமைச்சர் தேரருடன் வாதத்திற்குச் சென்றது அவர் நல்லவர் என்றோ தப்பு செய்யவில்லை என்றோ நிரூபிக்கவல்ல. மாறாக புலம்பெயர் முஸ்லீம்களின் உரிமைக்காகவே அவர் வாத்திற்குச் சென்றார்.

    அரசியல் இலாபம் தேடும் எந்த அரசியல்வாதியும் முன்னெடுக்காத முயற்சியை அமைச்சர் முன்னெடுத்தும் அதை வெற்றியுடன் முடித்ததும் பாராட்டத்தக்க விடயம்.

    சில அரசியல் வாதிகள் அமைச்சர் சத்தியம் செய்ய மறுத்தார் என்று கூறுகின்றனர் அவ்வாறு கூறுபவர்கள் உத்தமர்களாக இருந்தால் அனைவர் முன்னிலையிலும் அவர்களால் சத்தியம் செய்ய முடியுமா???

    இது முஸ்லீம்களுக்கான பிரச்சினை இந்த விடயத்தில் நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்தாலே வெற்றி பெற முடியும்.

    ReplyDelete

Powered by Blogger.