Header Ads



முஸ்லிம் அரசியல்வாதிகளின் வாக்குறுதிகள் எங்கே..?

1990 ஆம் ஆண்டு புலிகளினால் வடமாகாண  முஸ்லிம்கள் வெளியேற்றபட்ட போது சிலாவத்துறை மக்களும் தங்களுடைய சொந்த காணிகளையும் .வீடுகளையும்  இழந்து விட்டு வெளியேறினார்கள்.

மனிதாபிமான நடவடிக்கையின் பின்பு கடற்படையினர் முசலி பிரதேச சபை உட்பட்ட சிலாவத்துறை மக்களின் காணிகளை அடாத்தாக சுவீகரித்து கடற்படை முகாமாக மாற்றி வைத்துள்ளாதாக பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இந்த ஆட்சியில் இராணுவத்தினால் பிடித்து வைத்திருந்த  தமிழ் மக்களின் காணிகளை ஒப்படைக்கும் வேலையில் சிலாவத்துறை மக்களின் காணிகளை மட்டும் ஒப்படைக்காமல் கடந்த இரண்டு வார காலமாக தென்னை கண்றுகளையும் காணிகளை சுத்தம் செய்யும் நிலையினை படத்தில் காணலாம்.

கடந்த தேர்தல் காலத்தில் முஸ்லிம் அரசியல்வாதிகள் சிலாவத்துறை கடற்படை முகாமை அகற்றி தருகின்றேன். என்று ஊடக அறிக்கைகளையும் மேடை பேச்சுகளிலும்  பேசினார்கள் ஆனால் தேர்தல் முடிந்த பின்பு கொடுத்த வாக்குறுதிகளை மறந்து சுகபோகமாக வாழ்ந்து வருகின்றார்கள்.

நேற்று முன் தினம் இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் கூட பிரதம ரணில் விக்ரமசிங்க தெரிவித்தால் இரானுவத்தினால் பிடித்து வைத்திருக்கின்ற பொது மக்களின் காணிகள் விடுவிக்கபடும் என்று தெரிவித்தார்.

இந்த ஆட்சியில் சிலாவத்துறை கடற்படை அகற்றபட்டு பொது மக்களின் காணி வழங்கபடுமா?

No comments

Powered by Blogger.